அந்தரங்க உறுப்பில் டம்பிள்ஸை தொங்கவிட்டு கொடூர ராகிங்.. கேரளாவை உலுக்கிய சம்பவம்!

Author: Hariharasudhan
13 February 2025, 10:59 am

கேரளா நர்சிங் கல்லூரியில் அந்தரங்க உறுப்பில் டம்பிள்ஸை தொங்கவிட்ட ராகிங்கில் ஈடுபட்ட மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருவனந்தபுரம்: கேரள மாநிலம், கோட்டயத்தில் நர்சிங் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்குள்ள விடுதியில் தங்கி பயின்று வரும் முதலாமாண்டு மாணவர் ஒருவர், வீட்டில் தனிமையில் அமர்ந்து அழுது கொண்டிருந்துள்ளார். அப்போது, எதற்காக அழுகிறாய் என அவரது பெற்றோர் கேட்டுள்ளனர்.

அதற்கு அவர், “என்னுடன் சேர்த்து மூன்று முதலாமாண்டு மாணவர்களை கல்லூரியில் சேர்ந்ததில் இருந்தே சீனியர் மாணவர்கள் ராகிங் செய்து வந்தனர். பார்க்கும் இடத்திலெல்லாம் அசிங்கமாக பேசுவது, விக்கி போடச் சொல்வது, உடலை வைத்து அசிங்கப்படுத்துவது எனச் செய்து வந்தனர்.

ஒருநாள், எங்கள் மூவரையும் பாத்ரூமுக்கு அழைத்துச் சென்று உடைகளை கழற்றுமாறுக் கூறினர். அதற்கு நாங்கள் மறுத்ததால், எங்களை கொடூரமாகத் தாக்கினர். பின்னர், அவர்களே எங்கள ஆடை முழுவதையும் கழற்றினர். மேலும், காம்பஸ் கருவியால் எங்கள் உடலின் பல இடங்களில் கீறினர்.

Ragging in Kerala Kottayam Nursing College

அது மட்டுமல்லாமல், உடற்பயிற்சி செய்யப் பயன்படுத்தப்படும் டம்பிள்ஸை எங்களது ஆணுறுப்பில் கட்டி தொங்கவிட்டனர். இதனால் நாங்கள் வலி தாங்க முடியாமல் கத்தினோம். எனவே, காயத்திற்கு மருந்து போடுகிறோம் எனக் கூறி, பாத்ரூம் கழுவப் பயன்படுத்தப்படும் லோஷனை காயங்கள் முழுவதும் ஊற்றினர்.

மேலும், இவை அனைத்தையும் வீடியோவாக எடுத்து வைத்துக் கொண்டனர். எனவே, இந்த வீடியோவைக் காட்டி மிரட்டி, பணம், மதுபானம் ஆகியவற்றை வாங்க வற்புறுத்தினர். இது கடந்த மூன்று மாதங்களாக நடைபெற்று வருகிறது” என வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: காவிதான் தமிழகத்தை ஆளப்போகிறது.. அண்ணாமலைக்கு பயம்.. தமிழிசை சூளுரை!

இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோரின் உதவியுடன், பாதிக்கப்பட்ட மூன்று மாணவர்களும், கோட்டயம் நகரில் உள்ள காந்திநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது தொடர்பாக போலீசார் கல்லூரிக்கு தகவல் அளித்ததுடன், மாணவர்களையும் அடையாளம் கண்டனர்.

இதன்படி, கோட்டயம் முந்நிலவு பகுதியைச் சேர்ந்த சாமுவேல் ஜான்சன், வயநாடு நடவயல் பகுதியைச் சேர்ந்த ஜீவா, மலப்புரம் வண்டூரைச் சேர்ந்த ராகுல்ராஜ், மலப்புரம் மஞ்சேரியைச் சேர்ந்த ரிஜின் ஜித்து மற்றும் கோட்டயம் கோருத்தோடு பகுதியைச் சேர்ந்த விவேக் ஆகிய ஐந்து மாணவர்களையும் கைது செய்துள்ளனர். மேலும், கைதான மாணவர்களை சஸ்பெண்ட் செய்து கல்லூரி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

  • Veera Dheera Sooran Box Office Collection இறங்கி அடித்த சியான் விக்ரம்…அசுர வசூலில் ‘வீர தீர சூரன்’.!