குட்டிச் சாத்தானை ஏவி மாந்தரீகம்.. திருச்சியை அலற விட்ட ரகு : பல லட்சம் மோசடி செய்து தில்லாலங்கடி!

Author: Udayachandran RadhaKrishnan
5 February 2025, 2:39 pm

திருச்சி மாவட்டம் திருவரம்பூர் வட்டம் மலைக்கோயிலை சேர்ந்த மாணிக்கம் என்பவரது மகன் சதீஷ் பாபு (வயது 23). பட்டதாரியான சதீஷ் பாபு அரசு பணி தேடிக் கொண்டிருந்தார்.

வேலை வாய்ப்பு தொடர்பாக யூ டியூபில் தேடிக் கொண்டிருந்த போது, சென்னை, திருவல்லிக்கேணியைச் சேர்ந்த ரகு (வயது 45) என்பவரின் மாந்திரீக சித்து வேலை வீடியோக்களை பார்த்தார்.

இதையும் படியுங்க: திரிஷாவை தவிர வேறு யார்? விஜய்யை சரமாரியாக விமர்சித்த பிரபல வாரிசு!

இதனையடுத்து சதீஷ் பாபு, ரகுவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது ரகு, ஒரு பூஜை செய்தால் போதும் ஒரே வாரத்தில் கோடீஸ்வரனாக மாற்று காட்டுகிறேன் என ஆசை வார்த்தை கூறி பூஜை செய்வதற்கு அட்வான்ஸாக 3000 ரூபாய்
தரவேண்டும் என கூறியுள்ளார்.

ஆசை வார்த்தையில் மதி மயங்கிய சதீஷ் GPay மூலம் ரகுவின் வங்கிக் கணக்கிற்கு 3000 ரூபாய் அனுப்பியுள்ளார். ஆனாலும் ரகு சொன்னது போல் பூஜை நடத்தாமல் போக்கு காட்டி வந்துள்ளார்.

ஒரு கட்டத்தில் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சதீஷ் பாபு, ரகுவை நேரில் சந்தித்து பேசி தான் அனுப்பிய பணத்தை திரும்ப தருமாறு கேட்டபோது ரகு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து சதீஷ் பாபு திருவரம்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் ரகு மீது ஏமாற்றுதல், நம்பிக்கை மோசடி, மிரட்டல் விடுத்தல் ஆகிய மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மேலும் போலீசாரின் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் பல வெளியாகி உள்ளது. திருச்சி தனலட்சுமி சீனிவாசன் கல்லூரி பேராசிரியர் ஒருவர், அதே பகுதியைச் சேர்ந்த முரசொலி மாறன் என்கிற சிபி என்ற வழக்கறிஞரை கொலை செய்ய வேண்டும்.

அதில் எவ்வித சந்தேகமும் ஏற்படாதவாறு விபத்தில் சிக்கி மரணித்தது போல மாந்திரீகம் செய்து கொலை செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

இதற்காக ரகு பல லட்ச ரூபாய் கேட்டதுடன் அதற்காக அட்வான்ஸ் தொகையாக சில லட்சங்களை தனது மனைவியின் வங்கிக்கணக்கு மூலம் பெற்றுள்ளார்.

Trichy Raghu Arrest

இந்த நிலையில் அந்தப் பேராசிரியரும் – ரகுவும் பேசிய உரையாடல்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • ajith kumar asking for script to bala but bala did not give Full Script கொடுக்க மாட்டேன்- அஜித்தின் முகத்துக்கு நேராக சொன்ன பிரபல இயக்குனர்…