கல்லூரி மாணவருக்கு ராகிங் கொடுமை… கைது செய்யப்பட்ட 7 மாணவர்களை சஸ்பெண்ட் செய்த கல்லூரி நிர்வாகம்!!!
கோவை அவிநாசி சாலையில் இயங்கிவரும் பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்லூரியின் விடுதியில் தங்கி, திருப்பூர் ராயர்பாளையத்தை சேர்ந்த மாணவர் ஒருவர் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
அந்த மாணவரை அவரது கல்லூரியில் படிக்கும் மூத்த மாணவர்கள் ராகிங் செய்துள்ளனர். மாணவனை தங்களது அறைக்கு அழைத்துச் சென்று, கடுமையாக தாக்கி, மொட்டை அடித்து அரை நிர்வாணப்படுத்தியுள்ளனர்.
அதனை வீடியோ எடுத்து வைத்து, மது அருந்துவதற்கு பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். இதைத்தொடர்ந்து அநத மாணவர், தன்னை சீனியர் மாணவர்கள் ராகிங் செய்ததாக அவரது பெற்றோரிடம் கூறியுள்ளார்.
தங்களது மகன் தாக்கப்பட்டத் தகவலைக் கேட்ட பெற்றோர்கள், கோவத்துடனும் வேதனையுடனும் கல்லூரி நிவாகத்திடம் புகாரளித்துள்ளனர். கல்லூரி நிர்வாகமும் அந்த மாணவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்துள்ளது.
இருந்தும் மாணவனின் பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளனர். இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை செய்த காவல்துறையினர், மாணவன் தாக்கப்பட்டதை உறுதிப்படுத்தினர்.
இதைத்தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்ட இரண்டாம் ஆண்டு படிக்கும் மாதவன், மணி, வெங்கடேஷ், தரணிதரன், ஐயப்பன், யாலிஸ், சந்தோஷ் ஆகிய 7 மாணவர்களை கைது செய்தனர்.
இந்த நிலையில் கல்லூரி நிர்வாகமும் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, மாணவனை ராகிங் செய்து கைதான 7 மாணவர்களையும் இடைநீக்கம் செய்துள்ளதாக பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கோவையில் பல்வேறு கடைகளில் வீட்டிற்கு உள்ளே வளர்க்கும் செடிகள் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த வகை செடிகள் சின்கோனியம் ஸ்நேக் பிளான்ட்…
இந்திய இசையமைப்பாளர்களின் அதிக சம்பளம் வாங்கும் பிரபலமாக இருப்பவர் அனிருத்தான். இவர் இசையமைக்கும் அத்தனை ஆல்பமுமே ஹிட் ஆவதால் தயாரிப்பாளர்கள்…
வித்தியாசமான கதைக்களம் சிவகார்த்திகேயனின் நடிப்பில் மடோன்னே அஸ்வின் இயக்கத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான “மாவீரன்” திரைப்படம் சிவகார்த்திகேயனின்…
பிக் பாஸ் பிரபலம் தர்ஷன் கைது செய்யப்பட்டது சென்னையில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. நேற்று மாலை ஜிம்மில் இருந்து திரும்பிய…
திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே உள்ள மேட்டு இருங்களூரை சேர்ந்த துரைசேகர் என்பவரது மகன் 25 வயதுடைய ஜெகன். பி.காம்…
பல்வேறு நாடுகள் மீது அமெரிக்க அதிபர் கூடுதல் வரி விதிப்பை அறிவித்ததன் எதிரொலியால் பங்குச்சந்தைகள் கடும் சரிவை சந்தித்துள்ளன. அமெரிக்கா…
This website uses cookies.