தமிழகத்தில் தலைதூக்கும் ராகிங் கொடுமை.. ஜூனியர் மாணவரை நிர்வாணப்படுத்தி வீடியோ எடுத்து மிரட்டும் சீனியர்கள்!

Author: Udayachandran RadhaKrishnan
31 January 2024, 4:53 pm

தமிழகத்தில் தலைதூக்கும் ராகிங் கொடுமை.. ஜூனியர் மாணவரை நிர்வாணப்படுத்தி வீடியோ எடுத்து மிரட்டும் சீனியர்க்ள்!

சமீபத்தில் கோவையில் தனியார் கல்லூரி சீனியர் மாணவர்கள் மது அருந்துவதற்காக ஜூனியர் மாணவரை மிரட்டி பணம் கேட்டுள்ளனர். பணம் தர மறுத்ததால் கட்டி வைத்து மொட்டை அடித்து ராகிங் செய்த கொடுமை அரங்கேறியது.

இந்த நிலையில் அதைவிட கொடுமையான விஷயமாக சென்னையில் அரங்கேறியுள்ளது. சென்னை புழுதிவாக்கத்தை சேர்ந்த ஜூனியர் மாணவர் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.

அதில், சீனியர் மாணவர்கள் தன்னை துன்புறுத்துவதாகவும், காரில் என்னை நிர்வாணப்படுத்தி வீடியோ எடுத்து பணம் கேட்டு மிரட்டுவதாகவும் புகார் அளித்தார்.

இதையடுத்து சம்மந்தப்பட்ட கல்லூரியில் போலீசார் விசாரணையை துவங்கியுள்ளனர். ராகிங் என்பது மிகப்பெரிய குற்றம் என்றாலும், சிறிதளவு இருந்த ராகிங் கொடுமை தற்போத உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது தமிழகத்தில் கல்லூரி மாணவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

  • Varun Dhawan Keerthy Suresh viral video அட்லீ போனை பார்த்து கீர்த்தி சுரேஷ் அதிர்ச்சி…ஒரு டைரக்டர்-க்கு உண்டான மரியாதையே போச்சு…!
  • Views: - 317

    0

    0