நடுரோட்டில் சண்டை போட்ட ராகுல் டிராவிட்.. தீயாய் பரவும் வீடியோ!
Author: Hariharasudhan5 February 2025, 9:38 am
பெங்களூருவில் விபத்தை ஏற்படுத்திய ஆட்டோ ஓட்டுநருடன் ராகுல் டிராவிட் வாக்குவாதம் செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
பெங்களூரு: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், 2024 டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியின் தலைமை பயிற்சியாளருமான ராகுல் டிராவிட், கர்நாடக மாநிலத்தின் பெங்களூருவில் தற்போது உள்ளார். இந்த நிலையில், நேற்று மாலை பெங்களூருவில் நடந்த ஒரு சாலை விபத்தில் டிராவிட் சிக்கி உள்ளார்.
இதன்படி, அவரது கார் மீது ஆட்டோ ஒன்று உரசி உள்ளது. இதனால், அவரின் காரில் சில கீறல்கள் விழுந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் கோபம் அடைந்த ராகுல் டிராவிட், அந்த ஆட்டோ ஓட்டுநர் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர், இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது.
இது தொடர்பான விசாரணையில், இந்தச் சம்பவம், பெங்களூருவின் கன்னிங்ஹாம் சாலையில் நேற்று மாலை 4 மணியளவில் நடந்தது என்றும், இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் கூறப்படுகிறது. மேலும், சமூக வலைத்தளங்களில் பரவும் வீடியோவில், கார் மோதிய பிறகு டிராவிட் தனது காரை பரிசோதிப்பதையும், ஆட்டோ ஓட்டுநருடன் வாக்குவாதம் நடத்துவதையும் பார்க்க முடிகிறது.
இதையும் படிங்க: இப்படி ஒரு சர்ப்ரைஸா..! துப்பிய காதலி.. அடுத்துதான் ஹைலைட்!
மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக இதுவரை எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், இந்தச் சம்பவம் ஹைகிரவுண்ட்ஸ் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் நடந்துள்ள நிலையில், வழக்குகள் பதிவு செய்யப்படவில்லை.