2வது நாளாக அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான இடங்களில் ரெய்டு : கோவையில் போலீஸ் பாதுகாப்புடன் அதிகாரிகள் சோதனை!!!

Author: Udayachandran RadhaKrishnan
4 November 2023, 9:59 am

2வது நாளாக அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான இடங்களில் ரெய்டு : கோவையில் போலீஸ் பாதுகாப்புடன் அதிகாரிகள் சோதனை!!!

கோவையில் அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய நபர்களின் வீடுகளில் இரண்டாவது நாளாக வருமானவரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.

தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு தொடர்புடைய இடங்களில் , தமிழகம் முழுவதும் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனை இரண்டாவது நாளாக இன்றும் தொடர்ந்து வருகின்றது.

கோவை இராமநாதபுரத்தில் உள்ள திமுக பிரமுகர் மீனா ஜெயக்குமார் இல்லம், அவரது மகன் ஸ்ரீராமின் பீளமேடு அலுவலகம், சௌரிபாளையம் காசா கிரான்ட் அலுவலகம், கோவை சிங்காநல்லூர் கள்ளிமடையில் உள்ள காசா கிராண்ட் நிறுவனத்தின் முன்னாள் இயக்குனர் செந்தில்குமார் இல்லம் ஆகிய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

இரண்டாவது நாளாக வருமான வரித்துறை சோதனை நடைபெறும் இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. திமுக பிரமுகர் மீனா ஜெயக்குமாரின் மகன் ஸ்ரீராம் இல்லம், திமுக பிரமுகர் எஸ்.எம்.சாமி இல்லம் ஆகிய இரு இடங்களில் மட்டும் சோதனை நிறைவடைந்துள்ளது குறிப்பிடதக்கது.

  • anthanan funny criticize on good bad ugly movie ரசிகர் மன்றத் தலைவர் எடுத்த படம் மாதிரி இருக்கு- GBU-வை கண்டபடி கலாய்த்த பிரபலம்