கோவையில் பிரபல கோழிப் பண்ணை உட்பட 4 இடங்களில் நடந்த ரெய்டு.. ₹32 கோடி பறிமுதல்!!

Author: Udayachandran RadhaKrishnan
9 April 2024, 8:42 am

கோவையில் பிரபல கோழிப் பண்ணை உட்பட 4 இடங்களில் நடந்த ரெய்டு.. ₹32 கோடி பறிமுதல்!!

பொள்ளாச்சியில் பிரபல கோழிப்பண்ணை தலைமை அலுவலகம் உள்ளிட்ட நான்கு இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை. 32 கோடி பறிமுதல் என தகவல்.

பொள்ளாச்சி அடுத்த ஊஞ்சவேலாம்பட்டி பகுதியில் அருள் முருகன் மற்றும் சரவண முருகன் ஆகியோரது பிரபல கோழி பண்ணை செயல்பட்டு வருகிறது. அதன் தலைமை அலுவலகம் பொள்ளாச்சி வெங்கடேச காலனியில் செயல்படுகிறது.

இந்நிலையில் இவர்களது அலுவலகம் மற்றும் பண்ணை உள்ளிட்ட நான்கு இடங்களில் வருமான வரித்துறை அதிகாரி சக்திவேல் தலைமையிலான குழு விடிய விடிய சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்த சோதனையில் அலுவலகத்தில் வைத்திருந்த சுமார் 32 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது பாதுகாப்பு காரணங்களுக்காக பறிமுதல் செய்யப்பட்ட 32 கோடி ரூபாய் பணத்தை பொள்ளாச்சியில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியில் ஒப்படைக்கப்பட்டதாக அதிகாரிகள் வட்டத்தில் கூறப்படுகிறது.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி