தடையை மீறி ரயில் மறியல்.. காங்கிரசு சேர்ந்த பெண்கள் உட்பட 300க்கும் மேற்பட்டோர் குண்டுகட்டாக கைது!!!

Author: Udayachandran RadhaKrishnan
15 April 2023, 7:33 pm

தேனி மாவட்ட காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் முருகேசன் தலைமையில் இன்று மாலை ரயில் மறியல் நடைபெற்றது.

இதில் ராகுல் காந்தி எம்பி பதவி பறிக்கப்பட்டதற்கும் மத்திய அரசை கண்டித்து சுமார் 500க்கும் மேற்பட்டோர் தேனி பெரியகுளம் சாலையில் எஸ்பிஐ வங்கி முன்பாக காங்கிரஸ் கட்சியினர் போலீசாரின் தடையை மீறி தேனி ரயில் நிலையத்தில் நிறுத்தி வைத்திருந்த ரயிலின் முன்பாக தண்டவாளத்தில் அமர்ந்து கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் 130 பெண்கள் 180 ஆண்கள் என 310 பேரை கைது செய்து, வாகனத்தில் ஏற்றி தனியார் மண்டபத்திற்கு அழைத்துச் சென்றனர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு முன்பாக காங்கிரஸ் கட்சியினர் தேனி ரயில் நிலையத்திற்கு நுழைய முற்படும் போது தேனி டிஎஸ்பி பார்த்திபன் தலைமையிலான போலீசார் அவர்களை தடுத்தபோது, காவல்துறையினருக்கும் காங்கிரஸ் கட்சியினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

பின்னர் திடீரென காங்கிரஸ் கட்சியினர் தேனி பெரியகுளம் செல்லும் சாலையில் ரயில்வே கேட்டில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

  • Rajinikanth dedication ரஜினியோட அந்த வீடீயோவை ரிலீஸ் பண்ணுங்க..எல்லோரும் பார்க்கட்டும்..ரம்யா கிருஷ்ணன் பர பர பேச்சு.!