தொடரும் மாணவர்களின் படிக்கட்டு பயணம்… மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்திய ரயில்வே போலீசாரின் அசத்தல் முயற்சி
Author: Babu Lakshmanan7 April 2022, 8:58 pm
கோவை : குழந்தைகள் உதவி எண் 1098 குறித்து விழிப்புணர்வை போத்தனூரில் உள்ள தனியார் பள்ளியில் ரயில்வே போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
ங்கோவை போத்தனூர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் குழந்தைகளின் உதவி எண் 1098 குறித்து ரயில்வே போலீசார் விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர். அப்போது பள்ளியில் பெண் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை ஏற்பட்டாலோ, ஒன்று அல்லது குழுவாக குழந்தைகள் சந்தேகத்திற்கு இடமாக ரெயில் பயணம் செய்வதைப் பார்த்தாலும், உடல் மன ரீதியாக பாதிக்கப்பட்ட குழந்தைகளை பார்த்தால் அவர்களுக்கு உதவிட இலவச தொலைபேசி எண் 1098ஐ தொடர்பு கொள்ள வேண்டும் என பள்ளி மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
மேலும் தண்டவாளப் பாதையை கடப்பது பற்றியும், ஓடும் ரெயிலில் ஏறுவதும் இறங்குவதும் படிக்கட்டில் நின்று பயணம் செய்வதும் மற்றும் செல்போன் பேசிக் கொண்டு செல்வதும், அதனால் ஏற்படும் விளைவுகள் பற்றியும் கூறப்பட்டது.
முன் பின் தெரியாத நபர்கள் கொடுக்கும் தின் பண்டங்கள் மற்றும் குளிர்பானங்கள் வாங்கி அருந்த கூடாது என்றும், ஜன்னல் ஓரமாக உட்கார்ந்து செல்லும் பெண்கள் தங்கள் நகைகளை பத்திரமாக பாதுகாத்து கொள்ளவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இதேபோன்று அழிந்து வரும் மண் வளத்தை மீட்டேடுக்க வேண்டியதின் அவசியம் குறித்து ஈஷா சம்ஸ்கிரிதி மாணவர்கள் கோவை ரயில் நிலையத்தில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்டுத்தினர். விழிப்புணர்வு நிகழ்ச்சியில் 40 மாணவர்கள்கலந்து கொண்டனர். அவர்கள் நடனத்தின் மூலம் மக்களிடம் மண் வளபாதுகாப்பு குறித்து எடுத்துரைத்தனர்.