நாளை எங்கெல்லாம் ரெட் அலர்ட்? 9 துறைமுகங்களுக்கு முக்கிய எச்சரிக்கை!

Author: Hariharasudhan
25 November 2024, 3:07 pm

தென்கிழக்கு வங்கக் கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதியால் 9 இடங்களில் ஒன்றாம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது.

சென்னை: தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய கிழக்கு பூமத்திய ரேகை இந்தியப் பெருங்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நிலவியது. இந்த நிலையில், இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, இன்று (நவ.25) காலை 8.30 மணியளவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இந்தகாற்றழுத்த தாழ்வு மண்டலமானது, அடுத்த 2 நாட்களில் வடமேற்கு திசையில் தமிழகம், இலங்கை கடற்கரையை நோக்கி நகரக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

இதன் காரணமாக தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்து உள்ளது. அதேநேரம், கடலூர், விழுப்புரம், அரியலூர், சிவகங்கை, புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. 

Cyclone alarm

இந்த அறிவிப்பை தொடர்ந்து, சென்னை, கடலூர், நாகப்பட்டினம், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, பாம்பன் மற்றும் தூத்துக்குடி உள்பட 9 துறைமுகங்களில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, புயல் எச்சரிக்கை கூண்டும் ஏற்றப்பட்டு உள்ளது. மேலும், பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில், டெல்டா மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க: 75 தொகுதிக்கு 1 மாநிலமா? அர்ஜுன் சம்பத் கோரும் தமிழகம்

இவ்வாறு அனுப்பப்பட்டு உள்ள கடிதத்தில், மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், மழையால் பாதிக்கப்படும் மக்களுக்குத் தேவையான நிவாரண முகாம்களை ஏற்படுத்தவும் உத்தரவிடப்பட்டு உள்ளது. மேலும், மழை நிவாரணப் பணிகளை மேற்கொள்ள அனைத்தும் தயார் நிலையில் உள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 132

    0

    0