அரசு பேருந்தில் அருவியாய் கொட்டும் மழை : பேருந்துக்குள் ஓட்டை… மழையில் நனைந்தபடி பயணித்த பயணிகள்!!

Author: Udayachandran RadhaKrishnan
2 September 2022, 4:18 pm

கோவை அரசுப்பேருந்திற்குள் கொட்டும் மழையில் நனைந்த படி பயணித்த மக்கள்.பயணி ஒருவர் எடுத்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல்.

கோவை மாவட்டம் அன்னூரில் இருந்து கோவில்பாளையம் வழியாக காந்திபுரத்திற்கு 45″சி என்ற அரசுப்பேருந்து இயங்கி வருகிறது. இந்த பேருந்தில் பள்ளி மாணவ, மாணவிகள், பெண்கள் உள்ளிட்டோர் அதிகளவில் பயணம் செய்வர்.

இந்நிலையில் நேற்றிரவு பெய்த கனமழையில் கோவை காந்திபுரத்தில் இருந்து அன்னூர் நோக்கி வந்து கொண்டு இருந்துள்ளது. அப்போது கனமழை பெய்து கொண்டு இருந்துள்ளது.

இதனால் பேருந்திற்குள்ளும் மழைநீர் கொட்டத்துவங்கியுள்ளது. இதனால் பேருந்தில் இருந்த பயணிகள் முழுவதும் மழைநீரில் பேருந்திற்குள் கொட்டிய மழைநீரில் நனைந்தபடியே பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இதனை அப்பேருந்தில் பயணம் செய்த பயணி ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

தொடர் மழை பெய்து வருவதால் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி