‘பால் வாங்கக் கூட வெளியே வர முடியல’.. வெள்ளம் போல சூழ்ந்த மழைநீர்… அமைச்சரை முற்றுகையிட்ட பொதுமக்கள்..!!

Author: Babu Lakshmanan
27 October 2022, 6:33 pm

தூத்துக்குடி : தூத்துக்குடியில் நேற்று பெய்த மழையால் பாதிக்கப்பட்ட பகுதியை பார்வையிட வந்த அமைச்சர் அமைச்சர் கீதா ஜீவனை முற்றுகையிட்ட அப்பகுதி மக்கள் நிரந்தர தீர்வு ஏற்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

தூத்துக்குடியில் நேற்று இரவு பெய்த கன மழையின் காரணமாக பனிமய மாதா கோவில் பின்பகுதியான செயின்ட் பீட்டர் கோயில் தெருவில் மழைநீர் குளம் தேங்கியுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல், வீட்டின் உள்ளேயே முடங்கக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

thoothukudi rain - updatenews360

மேலும் மரப்பலகையை பயன்படுத்தி வீட்டின் உள்ளே இருந்து வெளியே வருவதற்கு தற்காலிக சாய்பு போல் வைத்து வெளியே வருகின்றனர். இந்த மழை நீரானது அங்குள்ள கழிவுநீர் வாய்க்காலில் கலந்துள்ளதால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு, தொற்று நோய் ஏற்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இந்த பகுதியில் மழை பெய்தாலே, இந்த நிலைதான் பல ஆண்டுகளாக இது தொடர்ந்து வருகிறது.

பால் வாங்க வெளியே செல்ல முடியவில்லை தேவாலயத்திற்கு செல்ல முடியவில்லை என்று வேதனை தெரிவிக்கும் பொதுமக்கள் இதற்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்த யாரும் முன் வருவது கிடையாது என்று குற்றம் சாட்டுகின்றனர்.

Minister geetha jeevan inspection - updatenews360

இதனிடையே அப்பகுதியை பார்வையிட வந்த சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவனை, அப்பகுதி பெண்கள் முற்றுகையிட்டு, இந்த பகுதியில் மழை நீர் தேங்குவதை தடுக்க நிரந்தரமாக தீர்வு ஏற்படுத்தி தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அப்பகுதி மக்களின் கோரிக்கையை கேட்டு அமைச்சர் நிரந்தர தீர்வு எடுத்த நடவடிக்கை எடுப்பதாக உறுதி எடுத்துச் சென்றார்.

Minister geetha jeevan inspection - updatenews360

தொடர்ந்து அந்த பகுதியை ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டு கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டிருந்த மண் மூட்டைகளை அப்புறப்படுத்தி, தண்ணீர் சீராக செல்ல நடவடிக்கை எடுத்ததோடு ஒரு மணி நேரத்தில் தண்ணீர் முழுமையாக இப்பகுதியில் இருந்த அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும், என்று தெரிவித்துச் சென்றார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 453

    0

    0