என்னடா இது… ரயில்லையுமா..? ஏசி கோச் பெட்டியில் ஒழுகிய மழை நீர்… இரவில் தூங்க முடியாமல் அவதிப்பட்ட பயணிகள்…!!!
Author: Babu Lakshmanan24 May 2024, 4:50 pm
சென்னையில் இருந்து இன்று காலை கன்னியாகுமரி வந்த அதிவிரைவு ரயிலின் ஏசி கோச் பெட்டியில் மழை நீர் ஒழுகியதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
சென்னையில் இருந்து தமிழகத்தில் பல்வேறு இடங்களுக்கு தினமும் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. கன்னியாகுமரிக்கு ரயில்கள் அதிகம் சென்று வருகின்றன. அந்த வகையில், நேற்று மாலை சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து மாலை இந்த ரயில் புறப்பட்டது. ரயிலின் அனைத்து பெட்டிகளிலும் ஏராளமான பயணிகள் இருந்தனர்.

மேலும் படிக்க: குடியரசு தலைவருக்கே இந்த நிலைமையா..? இதுதான் பாஜக ஆட்சி ; கோபத்தில் கொந்தளித்த கனிமொழி..!!!
இந்நிலையில், தமிழகத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக நேற்று இரவிலும் ரயில் செல்லும் இடங்களில் மழை பெய்தது. இந்த வேளையில் சென்னை -கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலின் ஏசி பெட்டியில் மேல் இருந்து மழைநீர் கசிய தொடங்கியது. சிறிது நேரத்தில் மழை அதிகரித்த நிலையில் ரயிலின் மேற்கூரையில் இருந்து மழை நீர் அதிகமாக கொட்ட ஆரம்பித்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த பயணிகள் உடனடியாக ரயில்வே அதிகாரிகள் மற்றும் ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதற்கிடையே சென்னை-கன்னியாகுமரி ரயிலின் ஏசி பெட்டியில் மழைநீர் கசிந்த வீடியோவை பயணி ஒருவர் எடுத்துள்ளார். தற்போது வீடியோ இணையதளங்களில் வெளியாகி உள்ளது.