சீர்காழியில் கடந்த 122 ஆண்டுகளில் இல்லாத அளவில் கனமழை பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் நேற்று இரவு முழுவதும் பெய்த மழையால் அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் ஒரே நாளில் அதிகபட்சமாக 43 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இடைவிடாமல் தொடர்ந்து பெய்த கனமழையால் டேனிஷ் கோட்டையை மழைநீர் சூழ்ந்தது.
இதுவரை இப்படியொரு மழையை பார்த்ததில்லை என அப்பகுதி மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த மழையால், அப்பகுதியில் பயிடப்பட்டு இருந்த பல ஆயிரம் ஏக்கர் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கின.
இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். இந்த நிலையில், சீர்காழியில் கடந்த 122 ஆண்டுகளில் இல்லாத அளவில் கனமழை பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
மேலும், மேகவெடிப்பு காரணமாக இது ஏற்படவில்லை என்றும், ஏற்கெனவே அதிகபட்ச மழைக்கான ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டது என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
ஏ.ஆர்.ரகுமானின் உடல்நிலை உலகப் புகழ்பெற்ற இசையமைப்பாளரும்,ஆஸ்கர் விருதாளருமான ஏ.ஆர்.ரகுமான் திடீர் உடல்நலக் குறைவு காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள…
கைதி 2 அப்டேட் தமிழ் திரைப்பட உலகில் முக்கிய இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் லோகேஷ் கனகராஜ்,தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்…
ஆஞ்சியோ சிகிச்சை பெற்ற ரகுமான் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் திடீர் உடல்நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு,தற்போது தீவிர கண்காணிப்பில் சிகிச்சை…
இந்தி திணிப்பை எதிர்க்கிறேன் தேசிய கல்விக் கொள்கை குறித்து நடிகரும்,ஆந்திர துணை முதல்வருமான பவன் கல்யாணின் கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியநிலையில்…
தனுஷுடன் புதிய திரைப்படம் – அஸ்வத் உறுதி இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து தனது வெற்றிப் படமான டிராகன் திரைப்படத்திற்குப் பிறகு…
‘ராபின்ஹுட்’ படத்தில் வார்னரின் சிறப்புத் தோற்றம் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர்,இந்திய ரசிகர்களிடையே அதிக ஆதரவு பெற்றுள்ள ஒரு…
This website uses cookies.