மழைநீர் தேங்க அரசு தான் காரணம்.. திமுக மீது கூட்டணி கட்சியை சேர்ந்த தலைவர் திடீர் விமர்சனம்!!
Author: Udayachandran RadhaKrishnan19 டிசம்பர் 2023, 6:24 மணி
மழைநீர் தேங்க அரசு தான் காரணம்.. திமுக மீது கூட்டணி கட்சியை சேர்ந்த தலைவர் திடீர் விமர்சனம்!!
திண்டுக்கல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சியின் மாநில பொதுச் செயலாளர் பாலகிருஷ்ணன்
நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்கும் உறுப்பினர்களை உடனடியாக சஸ்பெண்ட் செய்யும் போக்கு தொடர்ந்து நடைபெற்று வருகிறது பாரதிய ஜனதா கட்சியின் கட்டுப்பாட்டில் இந்தியா இருக்க வேண்டும் நாடாளுமன்றம் இருக்க வேண்டும் யாரும் எதிர்த்து பேசக்கூடாது என தனது கட்சியின் செயற்குழு பொதுக்குழு போல் மோடியும் அமிர்தாவும் செயல்பட்டு வருகின்றனர்.
கேள்வி கேட்ட உறுப்பினர்களை அவையில் சஸ்பெண்ட் செய்த பொழுது டெல்லிக்கே வராத ஒருவரையும் சேர்த்து 15 நபர்களாக சஸ்பெண்ட் செய்துள்ளனர் அதேபோல் நேற்றும் 74 எம்பிகளை கேள்வி கேட்டதற்காக சஸ்பெண்ட் செய்துள்ளனர்.
அதேபோல் இன்றும் கேள்வி கேட்பவர்கள் மீது கண்டிப்பாக பாரதிய ஜனதா கட்சியின் மோடி அரசு நடவடிக்கை எடுக்கும் இவர்களிடம் யாரும் கேள்வி கேட்கக் கூடாது நாடாளுமன்ற வளாகத்தில் சட்டம் ஒழுங்கு எப்படி உள்ளது பாதுகாப்பு வளையம் எப்படி உள்ளது இதை மீறி எப்படி இரண்டு நபர்கள் நாடாளுமன்றத்துக்குள் வந்து கலர் புகையை வீசினார்கள் என்பது குறித்து இதுவரை எந்த ஒரு அறிக்கையும் தகவலையும் உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் மோடியோ சொல்லவில்லை இதை தவிர்த்து பிரதமர் மோடி பல கோடி ரூபாய் மதிப்புள்ள தியானம் மண்டபத்தை திறந்து வைக்க அயோத்திக்கு சென்று விட்டார்.
தற்போது தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் மிகப் பெரிய அளவில் வரலாறு காணாத மழை பெய்தது இதில் 4 மாவட்டங்கள் தண்ணீரில் தத்தளித்தனர் தற்போதைய தமிழக அரசு முதல்வர் முதல் அமைச்சர் வரை அரசு அதிகாரிகள் இணைந்து இரண்டு நாட்களில் ஒரு சில பகுதிகளில் தண்ணீரை பாதி அளவுக்கு வெளியேற்றி விட்டனர் அதேபோல் பொதுமக்களும் இயல்பான நிலைக்கு வரும் அளவிற்கு அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்தனர்.
சென்னை பொதுமக்களுக்கு தேவையான பணிகள் முடிவடையும் நிலையில் தற்போது தென் மாவட்டங்களான தூத்துக்குடி திருநெல்வேலி கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் சென்னையை விட அதிகப்படியான மலை பெய்துள்ளது.
காயல்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் 90 மில்லி மீட்டர் மழை பதிவானதால் இப்பகுதியில் பொதுமக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது தமிழக அரசு போர்க்கால நடவடிக்கையில் ஈடுபட்டு பொதுமக்களை காத்து வருகிறது.
ஆனால் மத்திய அரசு சென்னை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தற்போது வரை நிவாரணம் வழங்கவில்லை இதே நிலைதான் திருநெல்வேலியிலும் நீடிக்கும் தமிழக அரசுக்கு தொடர்ந்து வழங்கப்படும் நிதியிலிருந்து தான் தற்போது நிதி வழங்கப்பட்டுள்ளது.
சிறப்பு நிதி எதுவும் வழங்கப்படவில்லை மேலும் தமிழகத்தை ஆய்வு செய்த மத்திய குழு தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டுள்ளது என்று கூறியுள்ளனர். ஆனால் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை அதை ஏற்க மறுக்கிறார் தமிழக முதல்வரிடம் தொலைபேசியில் பேசிய ராஜினாசிங் பாராட்டியுள்ளார்.
ஆனால் அதையும் அண்ணாமலை மறுக்கிறார் என்ன அரசியல் செய்கிறார்கள் என்பது தெரியவில்லை எதிர்க்கட்சிகள் பொதுமக்களின் பாதுகாப்பிற்கு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் தொடர்ந்து புகார்களை மட்டும் கூறி வருகின்றனர்
அதிமுக அரசுதான் கடந்த 10 வருடங்களாக ஆட்சி செய்தது பத்து வருடத்தில் இவர்கள் குளம் ஏறி கம்மா என அனைத்தையும் தூர்வாரி இருந்தால் தற்போது பெய்த மழையில் தண்ணீர் வெள்ளை காட்டாக மாறி இருக்காது,
மேலும் தமிழகத்தில் ஏறி குளம் கம்மாய் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் ஆக்கிரமிப்பாளர்கள் ஆக்கிரமிப்பு செய்து புறம்போக்கு நிலங்களை அதிகாரிகள் பணம் படைத்தவர்களுக்கு ஆதரவாக செயல்படுவதால் அதற்கு பட்டா பெற்றுக் கொண்டு மிகப் பெரிய கட்டிடங்களாகவும். கல்லூரிகளாகவும் ஏரி குளங்களில் கட்டியதால் தண்ணீர் செல்ல முடியாமல் சென்னை தண்ணீரில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டது…என் திண்டுக்கல்லில் பேட்டி அளித்தார்
0
0