பெண் போலீசிடம் அத்துமீறல்.. ராஜபாளையம் எஸ்எஸ்ஐ சஸ்பெண்ட்!

Author: Hariharasudhan
26 December 2024, 3:15 pm

ராஜபாளையத்தில் பெண் போலீசிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட எஸ்எஸ்ஐ மோகன்ராஜ் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளார்.

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே உள்ள தொம்பக்குளம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் மோகன்ராஜ் (52). இவர், ராஜபாளையம் தெற்கு காவல் நிலையத்தில் சிறப்பு சார்பு ஆய்வாளராக (SSI) பணியாற்றி வருகிறார். மேலும், இவர் ராஜபாளையம், மலையடிபட்டி காவலர் குடியிருப்பில் வசித்து வருகிறார்.

இவருக்கு திருமணமான நிலையில், ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இந்த நிலையில், மதுப்பழக்கம் கொண்டிருந்த மோகன்ராஜ், சம்பவத்தன்று மது அருந்தி விட்டு காவல் நிலையத்திற்கு வந்துள்ளார். இதனை ப்பார்த்த சக போலீசார், அவரை மாடியில் உள்ள அறையில் சென்று அமருமாறு அனுப்பி வைத்துள்ளனர்.

அங்கு சென்ற மோகன்ராஜ், தன்னுடன் பணியாற்றும் பெண் போலீஸ் ஒருவரிடம் பேச்சு கொடுத்துள்ளார். ஆனால் மோகன்ராஜ் போதையில் இருப்பதை அறிந்த அந்த பெண் போலீஸ், அவரிடம் இருந்து விலக முயற்சித்து உள்ளார். அப்போது மோகன்ராஜ், பெண் போலீஸிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

Rajapalayam South Police SSI Suspended for woman police sexual assault

இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் போலீஸ் கூச்சலிட, கீழே இருந்த சக போலீசார் மாடிக்குச் சென்று அவரை மீட்டு உள்ளனர். மேலும், இச்சம்பவம் காவல் நிலையத்தில் உள்ள சிசிடிவி கேமராவிலும் பதிவாகி உள்ளது. இதனையடுத்து, இது குறித்து உயரதிகாரிகளிடம் பெண் போலீஸ் புகார் அளித்துள்ளார்.

இதையும் படிங்க: ’இது பொள்ளாச்சி வன்கொடுமை அல்ல’.. அதிமுகவை சாடிய அமைச்சர்!

இந்தப் புகாரின் பேரில், மோகன்ராஜை மருத்துவப் பரிசோதனைக்காக ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அழைத்துச் சென்றனர். இதில், அவர் மது போதையில் இருந்தது உறுதிப்படுத்தப்பட்டது. தொடர்ந்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன், சரக துணை காவல் கண்காணிப்பாளர் ப்ரீத்தி ஆகியோருக்கு தகவல் அளிக்கப்பட்டு உள்ளது.

இதனையடுத்து, சிறப்பு சார்பு ஆய்வாளர் மோகன்ராஜை உடனடியாக ஆயுதப்படைக்கு மாற்றி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன் உத்தரவிட்டார். மேலும், அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டதையடுத்து, எஎஸ்ஐ மோகன்ராஜ் தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளார்.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 68

    0

    0

    Leave a Reply