73வது பிறந்த நாளையொட்டி 73 கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு … அசத்திய ரஜினி ரசிகர்கள்.. வாய்ஸ் மெசேஜ் மூலம் இன்ப அதிர்ச்சி கொடுத்த ரஜினிகாந்த்!

Author: Babu Lakshmanan
19 December 2022, 8:55 am

தூத்துக்குடியில் நடிகர் ரஜினிகாந்த்தின் 73-ஆது பிறந்தநாளை முன்னிட்டு 73கர்ப்பிணி பெண்களுக்கு 21 சீர்வரிசை பொருட்களுடன் நடந்த வளைகாப்பு நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் வாய்ஸ் மெசேஜ் மூலம் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டார்.

நடிகர் ரஜினிகாந்த் அவர்களின் 73வது பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடியில் நடிகர் ரஜினிகாந்த் ஒருங்கிணைந்த கிளை மன்றங்கள் சார்பில் 21சீர்வரிசைகளுடன் 73 கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இதில், கலந்துகொண்ட 73 கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு போடப்பட்டு, பின்பு நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் வழங்கிய 73-பட்டு சேலைகளுடன் சேர்த்து மஞ்சள், குங்குமம்,வெள்ளி வளையல்,வெற்றிலை,பாக்கு,உள்ளிட்ட 21-பொருட்கள் அடங்கிய சீர்வரிசை பொருட்கள் கர்ப்பிணி பெண்களுக்கு வழங்கப்பட்டது.

தொடர்ந்து, நடிகர் ரஜனிகாந்த் தூத்துக்குடியில் நடைபெற்ற வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பெண்களை வாய்ஸ் மெசேஜ் மூலம் வாழ்த்தினார். இதனை கேட்ட வளைகாப்பில் கலந்துகொண்ட பெண்கள் மகிழ்ச்சியுடன் சென்றனர்.

பின்னர் வளைகாப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற 73 கர்ப்பிணி பெண்களுக்கு அறுசுவை உணவு வழங்கப்பட்டது.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி