ரஜினியை சந்தித்த சாம்பியன் குகேஷ்.. வீட்டுக்கே அழைத்து சர்ப்ரைஸ்..!!!
Author: Udayachandran RadhaKrishnan26 December 2024, 11:06 am
உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்ற தமிழக இளம் வீரர் குகேஷ்க்கு உலக நாடுகள் பாராட்டி மகிழ்ந்து வருகிறது.
அந்த வகையில் இந்தியாவிலும் பாராட்டுகள் குவிந்து வருகிறது. குறிப்பாக தமிழக அரசு ₹5 கோடி பரிசு அறிவித்தது. அதே போன்ற தமிழ் சினிமா பிரபலங்கள் பாராட்டி வருகின்றனர்.
நடிகர் சிவகார்த்திகேயன் குகேஷ்க்கு வாட்ச் ஒன்றை பரிசாக அளித்தார். தற்போது நடிகர் ரஜினிகாந்த் குகேஷை தனது வீட்டிற்கு வரவழைத்து நேரில் பாராட்டியுள்ளார்.