“பயமா இருக்கா… இதுக்குமேல இன்னும் பயங்கரமா இருக்கும்..” பீஸ்ட் பார்த்த ரஜினியின் முடிவு என்ன..? கலக்கத்தில் நெல்சன்..!

Author: Rajesh
14 April 2022, 11:06 am

நடிகர் விஜய்யின் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த பீஸ்ட் திரைப்படம் நேற்று வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. விஜய்யின் முந்தைய படங்களுக்கு இல்லாத அளவுக்கு, இந்த படத்தின் புரோமேஷன் பணிகளை படக்குழு செய்திருந்தது. 10 ஆண்டுகளுக்கு பின்னர் விஜய் தொலைக்காட்சியில் பேட்டி கொடுத்த நிகழ்வுகளும் நடந்தன. தொடர்ந்து இரண்டு நாட்களாக இணையதளங்களில் விஜய்யின் ஆதிக்கம் அதிகமாகவே இருந்தன. அந்த அளவுக்கு பீஸ்ட் படத்தின் புரோமோஷன் பணிகளை செய்திருந்தது சன்பிக்சர்ஸ் நிறுவனம். ஆனால் இந்தப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது.

குறிப்பாக தற்போதைய இயக்குநர்கள் பெரிய நடிகர்களை வைத்து படம் இயக்கும்போது ஹீரோக்களின் இமேஜுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கின்றனர் கதையில் கோட்டை விட்டுவிடுகின்றனர் என்பதை வாடிக்கையாக உள்ளது. அந்த வகையில் தான் தற்போது பீஸ்ட் படமும் இருப்பதாக ரசிகர்களும் விமர்சகர்களும் முன் வைக்கின்றனர்.

இந்நிலையில் பீஸ்ட் படத்தை நடிகர் ரஜினிகாந்த் சன் பிக்சர்ஸ் அலுவலகத்தில் நேற்று பார்த்ததாகவும் தற்போது தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக பீஸ்ட் படத்தை இயக்கிய நெல்சன் திலீப்குமார் மீது கடுமையான விமர்சனங்களை அவரது ரசிகர்கள் வைத்திருந்தனர். இதனிடையே, நெல்சன் அடுத்ததாக ரஜினியை வைத்து படம் இயக்க இருக்கிறார். எனவே அடுத்த படமும் நெல்சன் இதுபோல் எடுத்தால் என்னாவது என்ற கேள்வியை ரஜினி ரசிகர்கள் வைக்க ஆரம்பித்திருக்கின்றனர்.

இப்படிப்பட்ட சூழலில் ரஜினி பீஸ்ட் படத்தை பார்த்ததாக வெளியாகி இருக்கும் தகவலால் ஒருவேளை அவர் இயக்குநரை மாற்றிவிடுவாரோ என்றும் நெட்டிசன்கள் கலாய்த்துவருகின்றனர்.

  • Annamalai vs Cool Suresh Whip Trendஅண்ணாமலையை தொடர்ந்து கூல் சுரேஷ் சாட்டையடி… வைரலாகும் வீடியோ..!
  • Views: - 2076

    0

    0