நெல்சனுக்கு செக் வைக்கிறாரா ரஜினி..? முழு பரபரப்பில் “தலைவர் 169”..!

Author: Rajesh
26 April 2022, 7:44 pm

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வெளியான பீஸ்ட் படம் எதிர்மறையான விமர்சனங்களையே பெற்றது. இதைத் தொடர்ந்த தலைவர் 169 படத்தை நெல்சன் இயக்குவாரா என்ற பெரிய குழப்பம் நீடித்து வந்தது. இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன்னர் இயக்குனர் நெல்சன், தனது ட்விட்டர் பக்கத்தில் இருந்து தலைவர் 169 படத்திற்கான டைட்டில் நீக்கிய நெல்சன் சிறிது நேரத்தில் மீண்டும் பதிவிட்டிருந்தார். இதனால் இந்த குழப்பம் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து இருந்தது. ஆனால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கொஞ்சம் யோசித்து நெல்சன் இயக்கத்தில் நடிக்க சம்மதித்துள்ளார் என்று கூறப்படுகிறது.

இதனால் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளார் நெல்சன். இருந்தாலும் ரஜினி இதை முழு மனதோடு ஏற்றுக்கொள்ளாதது போல் தெரிகிறது. ஏனென்றால் பீஸ்ட் படத்தில் ரஜினிக்கும் கொஞ்சம் அதிருப்தி இருந்துள்ளது. ‘என் மீது மக்கள் முழு நம்பிக்கை வைத்துள்ளார்கள், அதைக் காப்பாற்றும் பொறுப்பு எனக்கு உள்ளது. அதை காப்பாற்றும் விதமாக இப்படத்தை எடுத்துக் கொடுங்கள் என நெல்சனிடம் ரஜினி கூறியதாக தெரிகிறது.

மேலும், இந்தப்படத்தின் முழு ஸ்கிரிப்டையும் உடனே கொடுக்குமாறு கேட்டுள்ளார் ரஜினி. ரஜினி இவ்வாறு கேட்டதிலிருந்து நெல்சன் மீது ரஜினிக்கு நம்பிக்கை இல்லை என்பது அப்பட்டமாக தெரிகிறது. ஏற்கனவே பீஸ்ட் படத்தின் தோல்வியால் மிகுந்த மன கஷ்டத்தில் இருக்கும் நெல்சன் தற்போது குழம்பிப் போய் உள்ளார். தன் மீது நம்பிக்கை இல்லாமல் சூப்பர்ஸ்டார் இப்படி கேட்டதை நினைத்து பேசாமல் ஒதுங்கி இருக்கலாம் என யோசித்துக் கொண்டிருக்கிறாராம் நெல்சன். மேலும் படம் ஆரம்பிப்பதற்கு முன்பே இவ்வளவு பிரச்சனையா என்றும், படம் தொடங்கிய பிறகு எவ்வளவு பார்க்க வேண்டுமோ என்ற கவலையிலும் உள்ளாராம் நெல்சன்.

  • red card issued to serial actress raveena daha இனி ஒரு வருஷத்துக்கு நடிக்க கூடாது- பிரபல சீரீயல் நடிகைக்கு ரெட் கார்டு? அதிர்ச்சியில் ரசிகர்கள்…