அயோத்தி புறப்பட்டார் ரஜினிகாந்த்.. வரலாற்றில் மறக்க முடியாத நாள் : ரஜினியுடன் பயணித்த அந்த 2 பேர்..!!

Author: Udayachandran RadhaKrishnan
21 January 2024, 12:21 pm

அயோத்தி புறப்பட்டார் ரஜினிகாந்த்.. வரலாற்றில் மறக்க முடியாத நாள் : ரஜினியுடன் பயணித்த அந்த 2 பேர்..!!

நாளை கும்பாபிஷேகம் நடைபெற உள்ள நிலையில் அதில் பங்கேற்க ரஜினிகாந்த் சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் இருந்து புறப்பட்டுள்ளார். அவர் தனது மனைவி லதா ரஜினிகாந்த், அண்ணன் சத்யநாராயணா ஆகியோருடன் அயோத்தி புறப்பட்டுள்ளார்.

இவர்கள் 2 பேரும் ரஜினிகாந்த் புறப்படுவதற்கு முன்பே தனி கார்களில் சென்னை விமான நிலையத்துக்கு புறப்பட்டு சென்றனர். இவர்கள் 3 பேரும் சென்னையில் இருந்து டெல்லிக்கு விமானத்தில் செல்கின்றனர். அதன்பிறகு டெல்லியில் இருந்து அயோத்தி ராமர் கோவிலுக்கு செல்கின்றனர்.

அயோத்தி ராமர் கோவிலுக்கு புறப்பட்ட நடிகர் ரஜினிகாந்த் பத்திரிகையாளர்களிடம், 500 ஆண்டு பிரச்சனைக்கு உச்சநீதிமன்றம் தீர்ப்பு மூலம் தீர்வு வழங்கப்பட்டுள்ளது. இது வரலாற்றில் மறக்க முடியாத நாள் என தெரிவித்துள்ளார்.

முன்னதாக அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்பது என்பது மகிழ்ச்சி அளிக்கிறது என அவர் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

  • gangai amaran explained the copyrights issue on good bad ugly எங்க பாட்டுதானே ஜெயிக்க வைக்குது; காசு கொடுத்தா என்ன? – கண்டபடி கேட்ட கங்கை அமரன்