சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகியுள்ள டான் 100 கோடிக்கும் மேல் வசூல் செய்து பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றுள்ளது.
இந்நிலையில் தற்போது சிவகார்த்திகேயன் ரஜினிகாந்தை அவரது வீட்டில் நேரில் சந்தித்து ஆசி பெற்றுள்ளார். சிவகார்த்திகேயன், ரஜினியின் தீவிர ரசிகர் என்பது அனைவரும் அறிந்ததே. “இயக்குனர் சிபி, நான் படத்தில் இருக்கும் அனைவரும் சூப்பர் ஸ்டாரின் தீவிர ரசிகர்கள். எங்கள் டான் படத்தில் கூட பத்து இடங்களுக்கு மேல் அவரின் காட்சிகள் மற்றும் புகைப்படங்கள் இடம் பெற்றிருக்கின்றன” என்று சிவகார்த்திகேயன் தெரிவித்திருந்தார்.
டான் படம் பார்த்துவிட்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படக்குழுவினரை பாராட்டியதாகவும், கடைசி 30 நிமிடம் என்னால் கண்ணீரை தடுக்க முடியவில்லை என்றார் என்றும் சிவகார்த்திகேயன் தெரிவித்திருந்தார்.
“இந்திய சினிமாவின் டான் உடன். சூப்பர் ஸ்டாரை சந்தித்தேன். ரஜினிகாந்த் சாரின் ஆசிகளைப் பெற்றேன். இந்த 60 நிமிடங்கள் வாழ்நாள் நினைவாக இருக்கும்.. உங்கள் நேரத்திற்கு மிக்க நன்றி தலைவா மற்றும் டான் படத்திற்கு உங்கள் மதிப்புமிக்க பாராட்டுக்ககளை வழங்கியதற்கு நன்றி” என்றும் தெரிவித்துள்ளார். சிவகார்த்திகேயன், ரஜினிகாந்த் சந்தித்துள்ள இந்தப் புகைப்படம் இணையத்தில் மிகவும் வைரலாகி வருகிறது.
கார் ரேஸில் ஈடுபாடு நடிகர் அஜித்குமார் தற்போது பல்வேறு நாடுகளில் கார் பந்தயங்களில் ஈடுபட்டு வருகிறார். இரண்டு மாதங்களுக்கு முன்பு…
கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் புதியதாக கட்டப்பட்ட காத்திருப்போர் அறையினை கோவை தெற்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி…
நடிகை திரிஷா தென்னிந்திய சினிமாவை ஆட்டிப்படைத்து வருகிறார். 20 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார். பொன்னியின் செல்வன்…
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த பொங்கலூர் பகுதியில் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன…
ஹோட்டலில் இருந்து தப்பியோட்டம் மலையாளத்தில் மிக முக்கியமான நடிகராக வலம் வருபவர் ஷைன் டாம் சாக்கோ. இவர் சமீபத்தில் அஜித்குமாரின்…
This website uses cookies.