ரஜினிகாந்தை சந்தித்த நடிகர் சங்க நிர்வாகிகள்.. காரணம் என்ன.?

Author: Rajesh
2 June 2022, 1:35 pm

சென்னை போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்தின் இல்லத்திற்கு தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் நேரில் சென்று நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து பேசினார்.

நடிகர் சங்கத்தின் தலைவர் நாசர், துணைத்தலைவர் பூச்சி முருகன், நடிகர் கார்த்தி ஆகியோர் ரஜினிகாந்தை சந்தித்து பேசினார். சுமார் 45 நிமிடங்கள் இந்த சந்திப்பு நீடித்ததாக கூறப்படுகிறது.

அதன்பிறகு செய்தியாளருக்கு பேட்டி அளித்த நாசர், மரியாதை நிமித்தமாக நடிகர் ரஜினிகாந்தை சந்தித்துப் பேசியதாகவும், நடிகர் சங்கத்தின் வளர்ச்சி, எதிர்கால திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கி உள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் செம வைரலாகி வருகிறது.

  • tvk leader vijay statement on waqf amendment bill இதுதான் பாஜகவின் பெரும்பான்மைவாத ஆதிக்க அரசியல்- அறிக்கையால் அலறவிட்ட தவெக தலைவர் விஜய்…