ஜவான் படப்பிடிப்பில் பிஸியாக இருந்த ஷாருக்கான்… திடீரென என்ட்ரி கொடுத்த சூப்பர் ஸ்டார்.. ஷாக்கான படக்குழு!!

Author: Babu Lakshmanan
15 September 2022, 2:01 pm

ஜவான் சூட்டிங்கில் இருந்த பாலிவுட் நடிகர் ஷாருக்கானை, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திடீரென சந்தித்து பேசினார்.

இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஆதித்யராம் ஸ்டுடியோவில் பிரமாண்டமாக செட் போடப்பட்டு, சூட்டிங் நடந்து வருகிறது.

‘ஜெயிலர்’ படப்பிடிப்பு நடக்கும் அதே ஸ்டுடியோவில் தான், அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்து வரும் ‘ஜவான்’ படத்தின் படப்பிடிப்பும் நடந்து வருகிறது. தற்போது ஷாருக்கான் – நயன்தாரா ஆகியோர் இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வருகின்றனர்.

ஷாருக்கான் சூட்டிங்கில் இருப்பதை அறிந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உடனடியாக ‘ஜெயிலர்’ படப்பிடிப்பில் இருந்து விரைந்து சென்று, ‘ஜவான்’ படப்பிடிப்பில் நடித்து வந்த ஷாருக்கானை சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பு சிலமணி நேரம் நடந்ததாகவும், அப்போது இருவரும் சினிமா மற்றும் தங்களை பற்றி பேசிக்கொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

‘அண்ணாத்த’ படத்தை தொடர்ந்து, சன் பிச்சர்ஸ் நிறுவனம் மீண்டும் ரஜினிகாந்தை வைத்து, ‘ஜெயிலர்’ படத்தை மிக பிரமாண்டமாக தயாரித்து வரும் நிலையில், இன்னும் ஒரு சில நாட்களில் முக்கிய அப்டேட்டுகள் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 472

    0

    0