பஞ்சாயத்தை கூட்டிய சௌந்தர்யா.. ஐஸ்வர்யாவை கடுமையாக எச்சரித்த ரஜினிகாந்த்.. புதிய தகவல்..!
Author: Rajesh17 May 2022, 5:00 pm
ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா இவர் கடந்த 2004 ஆம் ஆண்டு நடிகர் தனுஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவரும் கூட்டாக கடந்த ஜனவரி மாதம் பிரிவதாக அறிவித்தனர்.
இவர்களை சேர்த்து வைக்க ரஜினிகாந்த பல முயற்சிகளை மேற்கொண்ட போதும் அது தோல்வியில் முடிந்தது. தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக இருந்தாலும் தன் மகள்களால் தீராத மனவேதனையில் இருந்து வருகிறார். நடிகர் தனுஷை பிரிந்த ஐஸ்வர்யா சோஷியல் மீடியா பக்கங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார். அடுத்தடுத்து திரைபடங்களை இயக்க திட்டமிட்டுள்ளார். பாலிவுட்டில் தான் இயக்க உள்ள பாலிவுட் படத்தில் தங்கை சௌந்தர்யாவின் கணவரை கதாநாயகனாக அறிமுகப்படுத்த அவருடன் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார்.
இதனால் தங்கை சௌந்தர்யாவின் குடும்பத்தில் சலசலப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து, சௌந்தர்யா தனது தந்தை ரஜினிகாந்திடம் சென்று நடந்ததை எடுத்துக் கூறி பஞ்சாயத்தை கூட்டியுள்ளார். அக்கா ஐஸ்வர்யாவை கண்டிக்குமாறும்,தனது கணவரை வைத்து படம் பண்ணும் முடிவை கைவிட வேண்டும் என்று கராராக கேட்டுக்கொண்டுள்ளார்.
ஏற்கனவே, குழப்பதிலும் மனவேதனையிலும் இருக்கும் ரஜினிகாந்த் புதிய பிரச்சனையால் குழம்பி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து அக்கா ஐஸ்வர்யாவையும்,தங்கை சௌந்தர்யாவையும் அழைத்து பேசிய ரஜினிகாந்த் இருவரையும் லெப்ட் அண்ட ரைட் வாங்கியதாக கோடம்பாக்கம் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.