தனுசை மன ரீதியாக தாக்க முயற்சி : விஸ்வரூபம் எடுக்க போகும் பழைய பிரச்சனை..!

Author: Rajesh
30 April 2022, 4:55 pm

சினிமா கெரியரில் உச்சத்தில் இருப்பவர் தான் நடிகர் தனுஷ். தமிழைத் தொடர்ந்து பாலிவுட், ஹாலிவுட் என்று எல்லா இடங்களிலும் பிரபலமாகி இருக்கிறார். இதற்கிடையில் தனுஷ் தன் மனைவி ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்யப் போவதாக சில மாதங்களுக்கு முன்பு அறிவித்ததை அடுத்து, பலரையும் அதிர்ச்சியடைச்செய்தது.
அதிலிருந்தே அவருடைய சினிமா கேரியரை அடியோடு அழிப்பதற்கு பல முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளிவந்த உள்ளன. தனுஷ்க்கு யாரும் படவாய்ப்பு தரக்கூடாது என்று பல தயாரிப்பாளர்களிடம், லதா ரஜினிகாந்த் தெரிவித்ததாகவும் தகவல்கள் வெளிவந்தன.

ஆனால் அவை எதுவும் வேலைக்கு ஆகவில்லை. அவர் போட்ட திட்டம் அனைத்தும் தனுசை ஒன்றும் செய்யமுடியாமல் போனதாகவும் கூறப்படுகிறது. மேலும் அவர் தற்போது பாலிவுட்டில் பல படங்களில் கமிட்டாகி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தான் ரஜினி ரசிகர்கள் தனுஷுக்கு குடைச்சல் கொடுக்க தற்போது ஒரு பழைய பிரச்சனையை மீண்டும் கையில் எடுக்க முடிவு எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

அதாவது தனுஷ், கஸ்தூரிராஜாவின் மகன் கிடையாது அவர் எங்களுடைய மகன் என்று மதுரையை சேர்ந்த ஒரு தம்பதிகள் சில வருடங்களுக்கு முன்பு வழக்கு தொடர்ந்தனர். இது அப்போது திரையுலகையே அதிரச் செய்தது. இது தொடர்பாக தனுஷும் நீதிமன்றத்துக்கு வந்து தன் தரப்பு நியாயத்தை தெரிவித்தார். தற்போது இந்த வழக்கை தான் மதுரையை சேர்ந்த ரஜினியின் ஆதரவாளர்கள் மீண்டும் தோண்டி எடுத்து தனுசை மன ரீதியாக தாக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதுமட்டுமின்றி கஸ்தூரிராஜா, தனுஷ் சம்பந்தமாக கொடுத்த பல தகவல்கள் நம்பிக்கையானதாக இல்லை.

அதனால் இந்தப் பிரச்சனையை கையில் எடுத்தால் நிச்சயம் தனுஷ் மன உளைச்சலால் பாதிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. எனவே தான் ரஜினியின் ஆதரவாளர்கள் இந்த சம்பவத்தை வைத்து அவருக்கு குடைச்சல் கொடுக்கும் எண்ணத்தில் தற்போது செயல்பட்டு கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

  • Sai Abhayankar Interview Highlightsவெறும் ரீல்ஸ்காக பாட்டு போடக்கூடாது…அனிருத்தை தாக்கிய சாய் அபயங்கர்..!
  • Views: - 1101

    0

    0