சிறைக்கு சென்று கணவனை சந்தித்த நளினி… சென்னை உயர்நீதிமன்றத்தால் அப்செட்.. ஏமாற்றத்துடன் வீடு திரும்பிய சோகம்..!!

Author: Babu Lakshmanan
17 June 2022, 1:23 pm

ராஜுவ் கொலை வழக்கில் பரோலில் உள்ள நளினி, வேலூர் சிறையில் இருக்கும் தனது கணவன் முருகனை சந்தித்து பேசினார்.

வேலூர் மாவட்டம் காட்பாடி பிரம்மபுரத்தில் ராஜுவ் கொலை வழக்கில் பரோலில் உள்ள நளினி அவர் வீட்டில் தங்கியுள்ளார். இந்த நிலையில், தமிழக அமைச்சரவை நிறைவேற்றிய தீர்மானத்தின் அடிப்படையில், தங்களையும் விடுதலை செய்யக்கோரி தாக்கல் செய்த மனு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

எப்படியும் தனக்கு விடுதலை கிடைத்து விடும் என்ற நம்பிக்கையில் நளினி எதிர்பார்த்திருந்தார். பரோலில் இருப்பதால், விருதம்பட்டு காவல்நிலையத்திற்கு நளினி பலத்த பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டு, நளினி கையொப்பம் இட்டார்.

பின்னர், தனக்கு விடுதலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் முருகனை சந்திக்க சிறைக்கு அழைத்து செல்லப்பட்டு பேசிவிட்டு வந்தார். ஆனால், சென்னை உயர்நீதிமன்றம் இவரை விடுதலை செய்ய முடியாது என கூறி தீர்ப்பளித்ததை கேட்டு அதிர்ந்து போனார். பின்னர், ஏமாற்றத்துடன் வீடு திரும்பினார் நளினி.

இதனிடையே, நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்போவதாக நளினியின் வழக்கறிஞர் தெரிவித்தார்.

  • actress Abort his Fetus After Famous Actor Warned வாரிசு நடிகருடன் கூத்து… கருவை சுமந்த நடிகை : காத்திருந்த டுவிஸ்ட்!