முதுமையால் அவதி… குடியரசு தலைவருக்கு உருக்கமான கடிதம் எழுதிய சாந்தன் ; இலங்கை செல்ல அனுமதி கிடைக்குமா..?

Author: Babu Lakshmanan
10 July 2023, 1:08 pm

திருச்சி ; இலங்கைக்குள் அனுமதிக்குமாறு இலங்கை ஜனாதிபதிக்கு திருச்சி சிறப்பு முகாமில் இருந்து சாந்தன் உருக்கமான கடிதம் எழுதியுள்ளார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த பேரறிவாளன் நன்னடத்தை பேரில், நீண்ட காலமாக சிறை தண்டனை அனுபவித்த காரணமாக, கடந்த ஆண்டு மே மாதம் விடுதலை செய்து உச்சநீதிமன்ற உத்தரவிட்டது. தொடர்ந்து நளினி, முருகன், ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், சாந்தன் ஆகிய ஆறு பேர் நன்னடத்தை மற்றும் சிறை தண்டனை காலத்தை கருத்தில் கொண்டு உச்சமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டனர்.

விடுதலை செய்யப்பட்ட சாந்தன், முருகன் ஆகிய இருவரும் தற்போது திருச்சி மத்திய சிறையில் உள்ள வெளிநாட்டவர்க்கான சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். முகாமில் உள்ள முருகனை அவரது மனைவி நளினி அடிக்கடி சந்தித்து செல்கிறார்.

இதனிடையே, சாந்தன் தன்னை இலங்கைக்கு வர அனுமதிக்குமாறு இலங்கை ஜனாதிபதிக்கு உருக்கமான ஒரு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், தன் தாய் முதுமையான நிலையில் உள்ளார். கடந்த 32 ஆண்டுகளாக அவரை காண முடியவில்லை. அவருடைய முதுமை காலத்தில் அவருடன் சேர்ந்து வாழ அனுமதிக்குமாறு அந்த கடிதத்தில் கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த கடிதத்தின் அடிப்படையில் அவருக்கு அனுமதி கிடைத்தால் அவர் இலங்கைக்கு செல்ல வாய்ப்பு ஏற்படும், என கூறப்படுகிறது.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 392

    0

    0