ராமர் கோவில் கும்பாபிஷேகம் : கோவையில் ராமர் வேடத்துடன் தீப விளக்கு ஏந்தி பெண்கள் ஊர்வலம்!

Author: Udayachandran RadhaKrishnan
22 January 2024, 9:00 pm

ராமர் கோவில் கும்பாபிஷேகம் :கோவையில் ராமர் வேடத்துடன் தீப விளக்கு ஏந்தி பெண்கள் ஊர்வலம்!

அயோத்தியில் நடைபெற்ற ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை தொடர்ந்து கோவையில் பெண்கள் வீடுகளில் தீப விளக்கு ஏற்றி வைத்து பின்னர் விளக்குகளுடன் ஊர்வலமாக சென்று வழிபட்டனர்.

நாடு முழுவதும் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை எதிர்பார்த்த நிலையில் இன்று பிரதமர் தலைமையில் வெகு விமர்சையாக கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

இதனையடுத்து தமிழகம் முழுவதும் உள்ள ராமர் கோவில்களில் சிறப்பு பூஜைகள்,பஜனைகள் நடைபெற்றது.இதனை தொடர்ந்து கோவை கதிர் நாயக்கன்பாளையம் அண்ணா நகர் பகுதியில் உள்ள 50க்கும் மேற்பட்ட வீடுகளில் ராமரை வரவேற்கும் விதமாக வண்ண கோலமிட்டு தீப விளக்கு ஏற்றி வழிபட்டனர்.

தொடர்ந்து ராமர் வேடமிட்ட குழந்தைகளுடன், பெண்கள் கையில் தீப விளக்குகளை ஏந்தியபடி ஊர்வலமாக அப்பகுதியில் உள்ள ராமர் கோவில் வரை சென்று சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ