ராமர் கோவில் திறப்பு விழா… இன்று அரைநாள் விடுமுறை ; அறிவிப்பு பலகையை வைத்த தலைமை தபால் நிலையம்

Author: Babu Lakshmanan
22 January 2024, 9:52 am

கோவை மாவட்ட தலைமை தபால் அலுவலகம் முன்பு அயோத்தி ராமர் கோவில் பிரதிஷ்டை முன்னிட்டு அரைநாள் விடுமுறை என்ற அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.

அயோத்தியில் ராமர் கோவில் பிரதிஷ்டை நிகழ்வு இன்று நடைபெறுகிறது. இதற்காக மத்திய அரசு அலுவலகங்கள் அனைத்தும் இன்று அரை நாள் விடுமுறை அளிக்கப்பட்டு மதியம் 2:30 மணி முதல் செயல்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில், கோவை குட்ஷெட் சாலையில் உள்ள மாவட்ட தலைமை தபால் நிலையத்தில் அயோத்தி ராமர் கோயில் பிரதிஷ்டையை முன்னிட்டு இன்று (22.01.2024) அரை நாள் விடுமுறை என்று அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.

இதுபோன்று மத்திய அரசு அலுவலகங்கள் அனைத்தும் இன்று பிற்பகல் வரை இயங்காது என்பது குறிப்பிடத்தக்கது.

  • GBU movie audience reaction எரிச்சல் ஆகுது, படம் முழுவதும் Instagram Reelsதான்- GBU பார்த்து கொந்தளித்த ரசிகர்கள்…
  • Close menu