கருத்து வேறுபாடுலாம் இல்ல.. ஆனால், அவர்தான் தலைவர்.. அடித்துக்கூறும் ராமதாஸ்!

Author: Hariharasudhan
2 January 2025, 3:41 pm

அன்புமணி உடன் எனக்கு எந்த கருத்து வேறுபாடும் கிடையாது என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், தைலாபுரம் தோட்டத்தில், பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய ராமதாஸ், “பாமக பொதுக் குழுவில் நடந்தது உட்கட்சி விவகாரம் தான். அன்புமணி உடன் எனக்கு எந்த கருத்து வேறுபாடும் கிடையாது.

என்னைச் சந்தித்து அன்புமணி பேசினார், பிரச்னை பேசி சரியாகிவிட்டது. பாமக இளைஞரணித் தலைவராக முகுந்தன் தொடர்வார். பாமக பொதுக்குழுவில் அறிவித்த மறுநாளே அவருக்கு நியமனக் கடிதமும் கொடுத்துவிட்டேன். பொதுக்குழுவில் நடந்த பிரச்னை, கட்சியின் வளர்ச்சியைப் பாதிக்காது. என்னை விமர்சித்தால் நான் கோபப்பட மாட்டேன்” எனக் கூறினார்.

முன்னதாக, கடந்த வாரம், புதுச்சேரியில் பாமகவின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில், பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்பட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து, சட்டமன்றத் தேர்தலில் அன்புமணிக்கு உதவ முகுந்தனை இளைஞர் அணித் தலைவராக நியமனம் செய்வதாக ராமதாஸ் அறிவித்தார்.

Ramadoss about PMK Conflict with Anbumani

அப்போது குறுக்கிட்ட அன்புமணி, மறுப்பு தெரிவித்தார். இதனால் கோபமான ராமதாஸ், தான் ஆரம்பித்த கட்சி இது என்றும், தாம் சொல்வதைத் தான் கேட்க வேண்டும் என்றும் கூறினார். அப்போது, தொண்டர்கள் சிலர், முகுந்தனை இளைஞரணி தலைவராக நியமிக்க எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதையும் படிங்க: இவர்களுக்கெல்லாம் Scrub Typhus வர வாய்ப்பு.. பொது சுகாதாரத்துறை முக்கிய அறிவுறுத்தல்!

அதற்கு, “இது என் கட்சி” அழுத்தம் திருத்தமாகக் கூறிய ராமதாஸ், விருப்பம் இல்லை என்றால் யாராக இருந்தாலும் விலகிக் கொள்ளலாம் எனக் கூறினார். இதனால் அதிருப்தி அடைந்த அன்புமணி, பனையூரில் தான் தனியாக அலுவலகம் தொடங்கி இருப்பதாகக் கூறிவிட்டு மைக்கைத் தூக்கி எறிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • Otha Ottu Muthaiya trailer release நக்கல் மன்னன் கவுண்டமணியின் கவுண்டர் அட்டாக்…’ஒத்த ஓட்டு முத்தையா’ பட ட்ரைலர் வெளியீடு..!