கலவரத்தை தூண்ட ராமதாஸ், அன்புமணி சதித்திட்டம் : விசிகவின் வன்னியரசு பகீர் புகார்!

Author: Udayachandran RadhaKrishnan
18 January 2025, 7:58 pm

விசிக துணைப் பொதுச்செயலாளர் வன்னியரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் சமூகப்பதற்றத்தை உருவாக்கி வன்முறையை நடத்தும் சதித்திட்டத்தை பாஜக தலைமையிலான கும்பல் முயற்சித்து வருகிறது.

இதையும் படியுங்க: குளிக்கும் போது வீடியோ கால்..கணக்கு மாஸ்டர் நடத்திய பாலியல் பாடம் : பள்ளி மாணவி விபரீத முடிவு!

கடந்த இரு நாட்களுக்கு முன் இராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி- நெல்வாய் கிராமத்தில் இரு கும்பலுக்கிடையே நடந்த பிரச்சனையில் பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளது ஒரு கும்பல்.

இப்போக்கு வன்மையான கண்டனத்துக்குரியதாகும். ஆனால்,இச்சம்பவத்தில் சம்பந்தமே இல்லாத விடுதலைச்சிறுத்தைகளை இணைத்து வைத்து அறிக்கை கொடுத்துள்ளனர்.

Ramadoss and Anbumani conspiracy to incite riots sasy VCK Vanni arasu

ராமதாஸ் அவர்களும் அன்புமணி அவர்களும் கலவரத்தை தூண்ட வேண்டும் எனும் சதித்திட்டமே இருவரது நோக்கமாக உள்ளது. அதன் தொடர்ச்சியாகத்தான்
நேற்று இரவு திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ள நெற்குந்தியில் உள்ள புரட்சியாளர் அம்பேத்கர் சிலையை சமூகவிரோதிகள் அவமதிப்பு செய்துள்ளனர்.

சமூகவிரோதிகளை கைது செய்ய வலியுறுத்தி விடுதலைச்சிறுத்தைகள் தற்போது வாணியம்பாடியில் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். அரசு இப்படியான சமூகவிரோதிகளை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் விடுதலைச்சிறுத்தைகள் தேர்தல் அங்கீகாரம் பெற்று அனைத்து மக்களுக்குமான பேரியக்கமாக வலிமை பெற்றுக்கொண்டிருக்கும் சூழலில், அப்பேரியக்கத்தின் மீது அவதூறு பரப்புவதை மருத்துவர் ராமதாஸ் அவர்கள் கைவிட்டு பொறுப்புடனும் நேர்மையுடனும் செயல்பட வேண்டும்.

பாமகவுக்குள் தந்தைக்கும் மகனுக்கும் இடையே நடைபெற்று வரும் அதிகாரப்போரைதிசை திருப்பவே இம்மாதிரியான வன்முறைச்சூழலை உருவாக்குகிறார்கள்.

Vanni Arasu Advised to Ramadoss and Anbumani

ஆகவே, தமிழ்நாடு காவல்துறை நேர்மையோடு விசாரித்து உண்மைத்தன்மையை மக்களுக்கு விளக்கவேண்டும்.

  • Idlikkadai vs Good Bad Ugly box office clash அஜித் படத்திற்கு வழிவிட்ட தனுஷ்…ரிலீஸ் தேதியை மாற்றிய படக்குழு..!
  • Leave a Reply