‘ஏய், அண்ணன் வண்டி வருது, விலகு விலகு’.. பேருந்தில் கியரை மாற்றி போட்ட எம்.எல்.ஏ… சிரிப்பலையில் மூழ்கிப் போன தொண்டர்கள்..!!!

Author: Babu Lakshmanan
15 July 2023, 10:05 am

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இருந்து புதிய பேருந்து வழித்தடத்தை எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.

பரமக்குடியில் இருந்து நயினார்கோவில், ஆட்டாங்குடி ஆகிய கிராமங்களுக்கு புதிய வழித்தடத்தில் பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. பேருந்தை சிறிது தூரம் ஓட்டி எம்எல்ஏ முருகேசன் துவக்கி வைத்தார். ராமநாதபுரம் மாவட்டத்தின் மையப்பகுதியில் பரமக்குடி அமைந்துள்ளது.

பரமக்குடியில் இருந்து நயினார்கோவில், ஆட்டாங்குடி கிராமங்களுக்கு நகரப்பேருந்து இயக்க வேண்டும் என இக்கிராம மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதனை அடுத்து, இன்று பரமக்குடி பேருந்து நிலையத்திலிருந்து சத்திரக்குடி வழியாக நயினார்கோவில் கிராமத்திற்கும், ஆட்டாங்குடி கிராமத்திற்கும் புதிய பேருந்து சேவையை பரமக்குடி எம்எல்ஏ முருகேசன் கொடியசைத்து, ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார்.

தொடர்ந்து சிறிது தூரம் பேருந்தை எம்எல்ஏ முருகேசன் ஓட்டினார். ஆட்டாங்குடி, நயினார்கோவில் கிராமங்களுக்கு நீண்ட வருடங்களுக்கு பிறகு பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளதால், கிராம மக்கள் மகிழ்ச்சியடைந்ததுடன் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தனர்.

எம்எல்ஏ முருகேசன் பேருந்தை ஒட்டிய போது ஏய் அண்ணன் வண்டி வருது, விலகு விலகு என தொண்டர்கள் கோஷமிட்டதால் சிரிப்பலை ஏற்பட்டது.

  • Keerthy Suresh new glamorous look கவர்ச்சி உடையில் பிரபல நடிகருடன் குத்தாட்டம்…வைரலாகும் கீர்த்தி சுரேஷ் வீடியோ..!
  • Views: - 355

    0

    0