கள்ளக்காதலை கைவிட்ட 80 வயது முதியவர் படுகொலை… 4 இளைஞர்களுக்கு ஆயுள்தண்டனை விதிப்பு
Author: Babu Lakshmanan7 June 2022, 7:24 pm
ராமநாதபுரம் : கள்ளக்காதல் செய்து கழட்டி விட்டதாக 80 வயது முதியவரை தாக்கி படுகொலை செய்த நான்கு இளைஞர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி ஸ்ரீநிவாசன் தீர்ப்பளித்தார்.
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் சின்னப்பாலம் பகுதியைச் சேர்ந்தவர் முனியசாமி. இவர் அதே பகுதியில் தனது மனைவியுடன் குடும்பம் நடத்தி வந்த நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு பெண்ணுடன் முனியசாமிக்கு தொடர்பு இருந்ததாகக் கூறப்படுகிறது.
பின்னர், இருவரும் சிறிது காலம் வாழ்ந்து வந்ததாகவும், பின்னர் மீண்டும் தனது மனைவியுடன் முனியசாமி சேர்ந்தது வாழ்ந்து வருவதாக சொல்லப்படுகிறது. இதனால் கள்ளத் தொடர்பில் இருந்த பெண்ணின் உறவினரான முனீஸ்வரன் என்பவர் தனது நண்பர்களான சரவணகுமார், நிர்மல் குமார் மற்றும் முனீஸ்வரன் ஆகிய நண்பர்களுடன் சேர்ந்து, கடந்த 03.01. 2021 ஆம் ஆண்டு அதே பகுதியில் முனியசாமியை கொடுரமாக தாக்கி கீழே தள்ளி விட்டதில் முனியசாமி சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்த பாம்பன் போலீசார் நான்கு நபர்களையும் பிடித்து சிறையில் அடைத்து இருந்தனர்.
இந்த வழக்கானது இன்று கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்திற்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஸ்ரீநிவாசன், நான்கு இளைஞர்களுக்கும் ஆயுள் தண்டனை மற்றும் தலா 5,000 அபராதம் விதித்து உத்தரவிட்டார். மேலும், அபராத தொகையை கட்டத்தவறினால் மேலும் 6 மாதம் சிறை என தீர்ப்பளித்தார்.