ராமநாதபுரம் தொகுதியில் வாய்ப்பில்லை.. ஓ.பன்னீர்செல்வம் வாக்குகளை கைப்பற்றும் ‘OPS’கள்?..
Author: Vignesh4 June 2024, 12:56 pm
543 தொகுதிகளை கொண்ட இந்திய நாடாளுமன்றத்திற்கு கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி கடந்த ஒன்றாம் தேதி வரை ஏழு கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்துள்ளது. தமிழ்நாட்டின் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் ஒரு தொகுதி என 40 தொகுதிகளில் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதில், திமுக, அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் கூட்டணியிட்டும், நாம் தமிழர் கட்சி தனித்தும் களம் கண்டது.
இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. அந்த வகையில், ராமநாதபுரம் தொகுதியில் பாஜக கூட்டணியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்ட முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அதிமுக வேட்பாளரை விட குறைவான வாக்குகள் பெற்றுள்ளார்.
ராமநாதபுரம் தொகுதியில் கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் முஸ்லீம் லீக் கட்சியை சேர்ந்த சீடிங் எம்பி நவாஸ் கனியும், அதிமுக சார்பில் ஜெயப் பெருமாள் போட்டியிட்டனர். அதேவேளையில், அதிமுகவிலிருந்து வெளியேற்றப்பட்ட முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் ராமநாதபுரம் தொகுதியில் பாஜக கூட்டணிக்கு ஆதரவாக சுயேட்சை வேட்பாளராக களம் கண்டார். எனினும், இதனைப் பயன்படுத்தி அவர் பெயரில் உள்ள ஆறு பேர் மனுக்களை தாக்கல் செய்தனர்.
இவர்களில், ஒருவரின் மனு தவிர மீதமுள்ள ஐந்து பேரின் வேட்பு மனுக்களும் ஏற்கப்பட்டன. ஒரே பெயரில் ஆறு பேர் போட்டியிட்டதால், வாக்காளர்கள் மத்தியில் குழப்பம் ஏற்படும் என்று எதிர்பார்த்த நிலையில், இன்று காலை முதல் வாக்கு எண்ணிக்கை எண்ணப்பட்டு வருகிறது. மதியம் 12 மணி நிலவரப்படி திமுக கூட்டணியில் களம் கண்ட நவாஸ் கனி 91,268 வாக்குகள் பெற்று முன்னணியில் உள்ளார். அவருக்கு அடுத்தபடியாக ஓ பன்னீர்செல்வம் 51,137 வாக்குகள் பெற்றுள்ளார். அதிமுக வேட்பாளர் ஜெயபெருமாள் 20,958 வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்தில் உள்ளார்.
அதே வேளையில், ராமநாதபுரம் தொகுதியில் ஓபிஎஸ் பெயரில் போட்டியிட்ட வேட்பாளர்கள் பெற்ற வாக்கு விபரங்களும் வெளியாகி உள்ளன. அதன்படி, ஓச்சப்பன் மகன் பன்னீர்செல்வம் 563, மலையாண்டி மகன் பன்னீர்செல்வம் 421, ஓய்யாத் தேவர் மகன் பன்னீர்செல்வம் 298, ஒய்யாரம் மகன் பன்னீர்செல்வம் 216, ஓச்சத்தேவர் மகன் பன்னீர்செல்வம் 105 வாக்குகள் பெற்றுள்ளனர்.
0
0