கடல் அரிப்பால் கல்லறைக்குள் புகுந்த கடல் நீர்.. களத்தில் இறங்கிய கிராம மக்கள்..!

Author: Vignesh
22 August 2024, 11:50 am

கடல் அரிப்பால் கல்லறைக்குள் புகுந்த கடல் நீர்”.. கல்லறையெல்லாம் நீரில் அடித்து செல்வதாக குற்றச்சாட்டு.. எவ்வளவு சொல்லியும் நடவடிக்கை இல்லையென கூறி தாங்களே களத்தில் இறங்கி சரி செய்த கிராம மக்கள்..!

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ள ‘ரோச்மாநகர்’ கடற்கரையோர கிராமத்தில் கடந்த சில நாட்களாக கடல் சீற்றம் காரணமாக மண் அரிப்பு ஏற்பட்டு கல்லறைத் தோட்டத்தில் புதைக்கப்பட்ட சவப்பெட்டிகள் கடல் நீருக்குள் இழுத்துச் செல்லப்பட்டது.

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு இதே நிலை ஏற்பட்டதால் கல்லறைத் தோட்டத்தை பாதுகாக்க கோரி மாவட்ட ஆட்சியர், மீன்வளத்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தனர்.

மீனவர் கிராம மக்களின் கல்லறை தோட்டத்தை பாதுகாக்க அதிகாரிகள் முன் வராத நிலையில் இன்றும் பலத்த கடல் சீற்றம் காரணமாக கல்லறையில் இருந்த சவப்பெட்டிகள் கடலுக்குள் செல்லாமல் தடுக்கும் வகையில் ரோஷ்மா நகர் கடற்கரையோர மீனவ கிராம மக்கள் 200க்கும் மேற்பட்ட பெண்கள் உள்ளிட்டோர் தாமாக முன்வந்து கிராம சேமிப்பு தொகை ரூபாய் 3 லட்சம் ரூபாய் செலவு செய்து பத்தாயிரம் மண் மூட்டைகள் தயார் செய்து கடல் சீற்ற அரிப்பை தடுத்து கல்லறை தோட்டத்தை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

  • Why no action is taken even after filing a complaint against Vijay and Trisha விஜய், திரிஷா மீது புகார் கொடுத்தும் ஏன் ஆக்ஷன் எடுக்கல ? சீறிய பெண் பிரபலம்!