பைக்கில் குறளி வித்தை காட்டிய நபர்… நடுரோட்டில் ஆபத்தான பயணம் ; வீடியோ வெளியாகி சர்ச்சை…!!

Author: Babu Lakshmanan
27 September 2023, 1:52 pm

வாகன ஓட்டிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் விதமாக ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் பைக்கில் நின்று கொண்டு ஆபத்தான பயணம் மேற்கொண்ட நபரால் பரபரப்பு நிலவியது.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் இருந்து பாம்பன் வரை உள்ள தேசிய நெடுஞ்சாலை அதிகமான சுற்றுலாப் பயணிகள் மற்றும் யாத்திரைகள் பயணம் மேற்கொள்ளக்கூடிய பகுதியாகும்.

இந்த ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் பைக்கில் நின்றபடி ஒருவர் ஆபத்தான பயணத்தை மேற்கொண்ட வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

https://player.vimeo.com/video/868628524?badge=0&autopause=0&player_id=0&app_id=58479

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாலையில் கடக்கும் பகுதியான அப்துல் கலாம் தேசிய நினைவகம் மற்றும் பாம்பன் சாலை உள்ளிட்ட பகுதிகளில், பைக்கில் நின்றபடி ஆபத்தான பயணம் மேற்கொண்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

  • Allu Arjun press meet emotional statement நானும் ஒரு குழந்தைக்கு அப்பா தான்..கண்ணீரோடு பேட்டியளித்த அல்லு அர்ஜுன்..!
  • Views: - 533

    0

    0