பைக்கில் சென்ற வாலிபர் மீது அரசுப் பேருந்து மோதி பயங்கர விபத்து… பதை பதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி…!!
Author: Babu Lakshmanan23 August 2023, 5:01 pm
ராமநாதபுரம் அருகே சாயல்குடியில் வாலிபர் மீது அரசு பேருந்து மோதி விபத்துக்குள்ளான பதைபதைக்க சிசிடிவி வீடியோ காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே நரிப்பையூர் பெரிய நாயகிபுரம் பகுதியைச் சேர்ந்த மனோகர். இவருக்கு மனைவி, மூன்று மகள்கள், விஜய் என்ற ஒரு மகனும் உள்ளனர்.
தனது சகோதரி திருமணம் நடைபெற உள்ள நிலையில், அதற்கான பொருட்களை வாங்க குடும்பத்தினர் சென்ற போது, சாயல்குடிக்கு கிழக்கு கடற்கரை சாலையில் விஜய் மட்டும் தனியாக பைக்கில் சென்றார்.
விவிஆர் நகர் அருகே விஜய் வந்தபோது ராமநாதபுரத்தில் இருந்து திசையன்விளை சென்ற அரசு பேருந்து வாலிபர் மீது மோதியதில் பலத்த காயம் அடைந்தார். மேல் சிகிச்சைக்காக ராமநாதபுரம் கொண்டு செல்லும் வழியில் வாலிபர் உயிரிழந்தார்.
அரசு பேருந்து ஓட்டுனர் திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரை சேர்ந்த இசக்கியப்பன் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். விபத்து தொடர்பாக பதைக்க வைக்கும் சிசிடிவி வீடியோ காட்சி தற்போது வெளியாகி உள்ளது.