‘என்ன, சோறு மட்டும் வைக்கிற… பீஸை யார் வைப்பா..?’ உணவு பரிமாறிய நபரிடம் திமுக தொண்டர் வாக்குவாதம்..!!

Author: Babu Lakshmanan
18 August 2023, 9:45 am

‘என்ன, சோறு மட்டும் வைக்கிற… பீஸை யார் வைப்பா..?’ எனக் கூறி உணவு பரிமாறிய நபரிடம் திமுக தொண்டர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென் மண்டல திமுக வாக்குச்சாவடி முகவர்களுக்காண பயிற்சி பட்டறை கூட்டம் ராமநாதபுரம் அருகே பேராவூர் தேவிபட்டினம் கடற்கரை சாலையில் நேற்று காலை முதல் நடைபெற்று வருகிறது. இதில் சுமார் 19 மாவட்டங்களில் இருந்து 20 ஆயிரம் முகவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

கலந்து கொண்ட அனைவருக்கும் மட்டன் பிரியாணி கமகம சாப்பாடு தயார் செய்யப்பட்டு வழங்கப்பட்டு வந்தது. அப்போது, தொண்டர் ஒருவர் சாப்பாடு வாங்கும் வரும் பொழுது பரிமாறிய நபர் வெறும் சோறு மட்டும் வைத்ததாக தெரிகிறது.

இதனால், கோபம் அடைந்த நபர் பரிமாறிய நபரிடம், ‘என்னய்யா சோறு மட்டும் வைக்கிற… பிஸையும் வை,’ என ஆத்திரத்துடன் கோபமாக வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

  • Kannada superstar Shivrajkumar cancer recovery நான் உயிரோட இருக்க காரணம் என் மனைவி தான்…நடிகர் சிவராஜ்குமார் உருக்கமாக பேசிய வீடியோ வைரல்..!
  • Views: - 399

    0

    0