ரமலான் நோன்பு மாதம் தொடக்கம் ; பள்ளி வாசல்களில் சிறப்பு தொழுகை நடத்திய இஸ்லாமிய சமூக மக்கள்..!!!

Author: Babu Lakshmanan
24 March 2023, 8:52 am

கோவை ; இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலான் நோன்பு துவங்கியதை தொடர்ந்து கோவையில் ஏராளமான பள்ளிவாசல்களில் இரவு நேர சிறப்பு தொழுகை நடைபெற்றது.

உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் புனித மாதமான ரமலான் மாதத்தில் 30 நாட்கள். நோன்பு இருந்து இறை வணக்கத்தில் ஈடுபடுகின்றனர்.இந்நிலையில் தமிழகத்தில் தலைமை காஜி அறிவிப்பின் படி இன்று முதல் நோன்பு துவங்கியது.

முதல் ரமலான் நோன்பு துவங்கியதை அடுத்து பள்ளிவாசல்களில் திராவீஹ் எனப்படும் சிறப்பு இரவு தொழுகை நடைபெற்றது. கோவையில் உள்ள பெரும்பாலான பள்ளி வாசல்களில் நடைபெற்ற இந்த சிறப்பு தொழுகையில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு இறை தொழுகையில் ஈடுபட்டனர்.

ரமலான் மாதம் முழுவதும் முப்பது நாட்களும் இந்த இரவு நேர தொழுகை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!