இன்று ரம்ஜான் கொண்டாட்டம்.. மசூதிகளில் சிறப்பு தொழுகை… கட்டித்தழுவி அன்பை பரிமாறிய இஸ்லாமியர்கள்!!

Author: Babu Lakshmanan
11 April 2024, 9:26 am

நாடு முழுவதும் புனித ரமலான் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில், இஸ்லாமியர்கள் ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி அன்பை பரிமாறி கொண்டனர்.

ஒவ்வொரு ஆண்டும் இஸ்லாமியர்கள் ரம்ஜான் பண்டிகைக்கு முன்பு ஒரு மாத காலம் நோன்பு இருப்பது மரபு. நோன்பு காலத்தில் இஸ்லாமியர்கள் விடியலுக்கு முன்பாக உணவு சாப்பிட்டு விட்டு பிறகு சூரியன் மறையும் வரை உணவு உண்ணாமலும், தொண்டையில் எச்சில் கூட விழுங்காமலும் மிகக் கடுமையான நோன்பு இருந்து ரமலானை கொண்டாடுவார்கள்.

மேலும் படிக்க: திமுக பிரச்சாரத்தில் பணப்பட்டுவாடா? பள்ளிக் குழந்தைகளை யாசகம் எடுப்பது போல அமர வைத்ததால் பரபரப்பு..Viral Video!

இந்த ஆண்டு ஈகைத் திருநாள் எனப்படும் ரமலான் பண்டிகை இன்று கொண்டாடப்படும் என தமிழ்நாடு அரசின் தலைமை ஹாஜி அறிவித்தார்.

மேலும் படிக்க: ஊழல் பற்றி பாஜக பேசலாமா..? மிரட்டி வாங்கிற காசுக்கும்.. பொருளுக்கும் வித்தியாசம் இருக்கா..? கனிமொழி பாய்ச்சல்…!!

அதன்படி, இன்று அதிகாலையில் இஸ்லாமியர்கள் சிறப்பு ரமலான் தொழுகையில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். திருச்சியில் மரக்கடை பகுதியில் உள்ள அரசு சையத் முதுஷா மேல்நிலைப் பள்ளியில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர் இணைந்து தொழுகையில் ஈடுபட்டனர்.

புத்தாடைகள் அணிந்து சிறப்பு தொழுகையை தொடர்ந்து ஒருவருக்கு ஒருவர் கட்டித் தழுவி அன்பை பரிமாறி கொண்டு மகிழ்ந்தனர்.

  • dhanush was the first actor who acted in six pack சூர்யாவுக்கு முன்னாடியே அவர் சிக்ஸ் பேக் வச்சிந்தார்- சிவகுமாருக்கு பதிலடி கொடுத்த விஷால்?