திருமணத் தேதியை முடிவு செய்தது சினிமா நட்சத்திர ஜோடி..!

Author: Rajesh
9 April 2022, 10:47 am

பாலிவுட் நட்சத்திரங்களான ஆலியா பட் மற்றும் ரன்பீர் கபூர் ஆகிய இருவரும் 2017-ஆம் ஆண்டிலிருந்து காதலித்து வருகின்றனர். இவர்கள் எப்போது திருமணம் செய்வார்கள் குறித்த செய்திகள் கடந்த சில நாட்களாக பாலிவுட் சினிமாவில் பேசும் பொருளாகவே இருந்தது. ஆனாலும், இருவரும் தங்களது திருமணம் குறித்து அதிகாரப்பூர்வமாக எதையும் தெரிவிக்காத நிலையில், ரன்பீரின் பாந்த்ரா இல்லத்தில் திருமண ஏற்பாடுகள் முழு வேகத்தில் நடந்து வந்தது. இந்தநிலையில் ஆலியா பட் – ரன்பீர் கபூரின் திருமணம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

ஆலியாவின் உறவினர் ராபின் இந்த தகவலை வெளிப்படுத்தியுள்ளார். அதன்படி ஆலியா மற்றும் ரன்பீர் ஏப்ரல் 14ம் தேதி திருமணம் செய்யவுள்ளது உறுதியாகியுள்ளது. திருமண விழா மொத்தம் நான்கு நாட்கள் நடக்கவுள்ளது என்றும் ஏப்ரல் 13ம் தேதி மெஹந்தி விழாவுடன் தொடங்கும் என்றும் அந்த உறவினர் ஊடகங்களிடம் கூறியுள்ளார்.

பஞ்சாப் முறைப்படி நடக்கவிருக்கும் இந்த திருமணத்திற்கு நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே அழைக்கப்பட்டுள்ளனர். இந்த திருமண விழாவிற்கு ஒரு சில பிரபலங்கள் மட்டுமே கலந்துகொள்ளவுள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.

  • Jyothika controversy in Bollywood web series ஜோதிகா நீங்களே இப்படி பண்ணலாமா…படு கேவலம்…முகம் சுளித்த ரசிகர்கள்.!
  • Close menu