ஃபேர்வெல் கொண்டாடிய மாணவிகளின் மேலாடையைக் கழற்றச் சொன்ன பள்ளி ஆசிரியர்.. அதிர்ச்சி சம்பவம்!

Author: Hariharasudhan
13 January 2025, 3:14 pm

ஜார்கண்டில், இறுதித் தேர்வு நாளைக் கொண்டாடிய மாணவிகளின் மேலாடையைக் கழற்றச் சொன்ன பள்ளி ஆசிரியர் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

ராஞ்சி: ஜார்கண்ட் மாநிலம், ராஞ்சியில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு சமீபத்தில் 10ஆம் வகுப்பு தேர்வு நிறைவடைந்து உள்ளது. எனவே, அந்தப் பள்ளியில் பயின்று வரும் மாணவிகள், இதனை ‘பேனா தினமாகக்’ கொண்டாடியுள்ளனர்.

அந்த வகையில், மாணவிகள், சக மாணவிகளின் சட்டையில் அவர்களின் பெயரையும், நினைவுகள் அடங்கிய வாசகங்களையும் எழுதியுள்ளனர். அப்போது, இதனைப் பார்த்த பள்ளி தலைமை ஆசிரியர் தேவி ஸ்ரீ, கடும் கோபம் அடைந்துள்ளார். மேலும், இதனால் தங்கள் பள்ளியின் பெயர் பாதிக்கப்படும் எனக் கூறி, அவர் மாணவிகளின் சட்டைகளைக் கழற்றி வீட்டிற்கு அனுப்பியுள்ளார்.

இவ்வாறு ஆண் ஆசிரியர்கள் முன்னிலையில், பல மாணவிகளின் சட்டைகளைக் களைய கட்டாயப்படுத்தியுள்ளார். இதனால் பல மாணவிகள் பள்ளியிலேயே இருந்துள்ளனர். இதனிடையே, தங்களிடம் வேறு சட்டை வைத்திருந்த 20 மாணவிகள் மட்டும், அவர்கள் வைத்திருந்த சட்டையை அணிந்து வீட்டிற்குச் சென்றுள்ளனர்.

School Principal forces girl students to remove shirt in Jharkhand Ranchi

மேலும், மற்ற 80 மாணவிகளும் மேலாடை இல்லாமல், பிளேசர்கள் மட்டுமே அணிந்து வீட்டிற்குச் சென்றுள்ளனர். இவ்வாறு மாணவிகள் வீட்டுக்கு வந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர், உடனடியாக இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இதையும் படிங்க: ’ஆணாதிக்க ஆழ்மன வக்கிரம்’.. பாலாவை கடுமையாக சாடிய பிரபல இயக்குநர்!

அந்தப் புகாரில், இந்தச் சம்பவம் மாணவிகளை மன ரீதியாக பாதித்துள்ளதாகவும், இது மன ரீதியான வன்கொடுமை என்றும் கூறியுள்ளனர். மேலும், இதனால் சில மாணவிகள் பள்ளிக்கு மீண்டும் செல்வதற்கு பயப்படுவதாகவும் வேதனையுடன் தெரிவித்து உள்ளனர்.

இதனையடுத்து, இந்தப் புகாரின் பேரில், போலீசார் தரப்பில் 5 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதைனைத் தொடர்ந்து, இந்த புகாரின் மீது விசாரணை மேற்கொண்டு தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் உதவி ஆணையர் உறுதி அளித்துள்ளார்.

  • sr prabhu reply for comments on actor shri health issues விஷயம் தெரியாம பேசுறவங்க “Beep”… ஸ்ரீ விவகாரத்தில் அசிங்கமாக திட்டிய தயாரிப்பாளர்!