‘வெளியே சொன்னால் உன் அப்பா, அம்மாவை தூக்கிருவேன்’… 13 வயது சிறுமியை மிரட்டி பலமுறை பாலியல் பலாத்காரம் ; இருவர் கைது..!!

Author: Babu Lakshmanan
14 June 2023, 3:58 pm

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 13 வயது சிறுமியை மிரட்டி பலமுறை பாலியல் வன்புணர்வு செய்த இருவரை போக்சோ சட்டத்தில் கைது மகளிர் போலீசார் கைது செய்தனர்.

ஆற்காடு கொல்லபாளையம் தெருவை சேர்ந்தவன் முனியாண்டி (37). காய்கறி அங்காடியில் கொத்தமல்லி, கறிவேப்பிலை விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். மேலும், அதே தெருவில் வசித்து வரும் பங்க் கடை நடத்தி வரும் சந்திரன் என்பவர் 13 வயது சிறுமியை (9ம் வகுப்பு மாணவி) வீட்டில் பெற்றோர்கள் இல்லாத நேரம் பார்த்து, சுவர் ஏறி குதித்து வீட்டில் தனியாக இருந்த சிறுமியை இருவரும் சேர்ந்து மிரட்டி பாலியல் வன்புணர்வு செய்ததாக தெரிகிறது.

இதை வெளியே சொன்னால் சிறுமியின் பெற்றோரை தூக்கி விடுவேன் என மிரட்டி பலமுறை பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளார். சிறுமி நடவடிக்கையில் மாற்றத்தை கவனித்த பெற்றோர் விசாரித்தபோது, தனது மகள் கூறியதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் ராணிப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதனை தொடர்ந்து, முனியாண்டிமற்றும் சந்திரனை கைது செய்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த ராணிப்பேட்டை மகளிர் போலீசார் அவனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!