ராணிப்பேட்டை மாவட்டத்தில் 13 வயது சிறுமியை மிரட்டி பலமுறை பாலியல் வன்புணர்வு செய்த இருவரை போக்சோ சட்டத்தில் கைது மகளிர் போலீசார் கைது செய்தனர்.
ஆற்காடு கொல்லபாளையம் தெருவை சேர்ந்தவன் முனியாண்டி (37). காய்கறி அங்காடியில் கொத்தமல்லி, கறிவேப்பிலை விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். மேலும், அதே தெருவில் வசித்து வரும் பங்க் கடை நடத்தி வரும் சந்திரன் என்பவர் 13 வயது சிறுமியை (9ம் வகுப்பு மாணவி) வீட்டில் பெற்றோர்கள் இல்லாத நேரம் பார்த்து, சுவர் ஏறி குதித்து வீட்டில் தனியாக இருந்த சிறுமியை இருவரும் சேர்ந்து மிரட்டி பாலியல் வன்புணர்வு செய்ததாக தெரிகிறது.
இதை வெளியே சொன்னால் சிறுமியின் பெற்றோரை தூக்கி விடுவேன் என மிரட்டி பலமுறை பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளார். சிறுமி நடவடிக்கையில் மாற்றத்தை கவனித்த பெற்றோர் விசாரித்தபோது, தனது மகள் கூறியதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் ராணிப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதனை தொடர்ந்து, முனியாண்டிமற்றும் சந்திரனை கைது செய்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த ராணிப்பேட்டை மகளிர் போலீசார் அவனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
நடிகர் விஜய் சினிமாவில் உச்ச நடிகராக உள்ள நிலையில் அரசியலில் ஈடுபட்டு வருகிறார். 2026ல் நடக்கும் தேர்தலை மையமாக வைத்து…
வெற்றி இயக்குனர்… சமீப காலமாகவே கோலிவுட்டின் வெற்றி இயக்குனராக வலம் வருபவர் வெற்றிமாறன். சமீபத்தில் இவர் இயக்கத்தில் வெளியான “விடுதலை…
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஆவரங்காடு பகுதியில் ஸ்ரீ அக்னி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு பூச்சாற்றுதலுடன்…
கோவை தொண்டாமுத்தூர் பகுதியைச் சேர்ந்த அசாம் மாநிலத்திலத்தை சேர்ந்த வாய் பேச முடியாது 14 வயது சிறுமியை பாலியல் சீண்டல்…
எகிறும் எதிர்பார்ப்பு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம் தேதி…
This website uses cookies.