14 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய பெயிண்டர் ; மனைவியை பிரசவத்திற்காக தாய் வீட்டுக்கு அனுப்பி விட்டு அத்துமீறல்..!!

Author: Babu Lakshmanan
5 January 2023, 3:51 pm

ராணிப்பேட்டை : ஆற்காடு அருகே 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து ஆறு மாத கர்ப்பமாக்கிய பெயிண்டரை போக்சோவில் கைது செய்து மத்திய சிறையில் அடைத்தனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த மேல்விஷராம் ஹாஜிப்பேட்டை அம்சா நகர் பகுதியைச் சேர்ந்தவர் சலீம்பாஷா (21). பெயிண்டர் வேலை செய்து வருகிறார். இவர் மனைவி இரண்டாவது பிரவசத்துக்காக தனது தாய் வீட்டுக்கு சில மாதங்களுக்கு முன்பு சென்றுள்ளார். இந்த நிலையில் அதே பகுதியில் சலீம்பாஷாவின் உறவுக்காரர்கள் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், இவரது உறவினரான 14 வயது சிறுமி அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்தபோது, சிறுமியின் பாட்டி சலீம் பாஷாவுக்கு கடந்த சில மாதங்களாக தினந்தோறும் சாப்பாடு கொடுத்து வந்துள்ளார்.

இதன் காரணமாக ஒரு நாள் சலீம் பாஷா அந்த சிறுமியை கத்தியை காட்டி மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததோடு, அந்த சிறுமியிடம் இதைப்பற்றி வெளியில் யாரிடமாவது சொன்னால் உன்னை கொலை செய்து விடுவதாக கடுமையாக மிரட்டால் விடுத்துள்ளார்.

மேலும், கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறுமிக்கு திடீரென வயிறு வலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அவரின் பெற்றோர் சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அப்போது, மருத்துவர் பரிசோதனை செய்த போது, சிறுமி 6 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. பிறகு தொடர்ந்து சிறுமியிடம் பெற்றோர் விசாரித்தபோது, நடந்ததை பற்றி அந்த சிறுமி அவர்களிடம் தெரிவித்தார்.

இதையடுத்து, சிறுமியின் பெற்றோர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் ராணிப்பேட்டை அனைத்து மகளிர் போலீசார், அவனை போக்சோ வழக்கில் சலீம் பாஷாவை கைது செய்தனர். தொடர்ந்து அவரை மகிலா நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி போலீசார் வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

  • Nayanthara and Vignesh Shivan பாவம் விக்கி.. நயன்தாராவை திருமணம் செய்துவிட்டு கூஜா தூக்குறார்.. பிரபலம் விளாசல்!
  • Views: - 786

    0

    0