சீமானின் டூர்.. அதிர்ச்சி கொடுத்த ராணிப்பேட்டை நிர்வாகி.. அடுத்தடுத்து ஆட்டம் காணும் நாதக!

Author: Hariharasudhan
25 February 2025, 9:57 am

நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுவதாக, ராணிப்பேட்டை மாவட்டச் செயலாளர் பாவேந்தன் அறிவித்துள்ளது கட்சியினுள் பேசுபொருளாகியுள்ளது.

ராணிப்பேட்டை: நாம் தமிழர் கட்சியின் ராணிப்பேட்டை மாவட்டச் செயலாளர் பாவேந்தன், அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். மேலும், இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அரசியல் மாற்றம் வர வேண்டும் என்பதற்காக நாம் தமிழர் கட்சியில் இணைந்தேன்.

இணைந்த நாள் முதல், போராட்டங்கள், ஆர்பாட்டங்கள் என அனைத்து களப்பணிகளை வழிநடத்தியதோடு, 2019 ஆம் ஆண்டு அரக்கோணம் பாராளுமன்றத் தேர்தலில், நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிட்டு, ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் கடுமையாக உழைத்து, மக்கள் போராட்டங்களில் மக்களில் ஒருவனாக உண்மையும் நேர்மையாக நின்று, கட்சிக்கு வலுசேர்த்து வாக்கு சேகரித்தேன்.

அதில், பெரியார் உணர்வாளர்களுடைய வாக்குகளும் அடங்கும். அதுமட்டுமின்றி, 2021இல் சோளிங்கர் சட்டமன்றத் தொகுதியில், நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக, மாற்று அரசியலை முன்வைத்து கொள்கை வென்றிட தேர்தல் களத்தில் பணியாற்றினேன். இதனால், இரண்டு தேர்தல்களில் போட்டியிட்டு பெரும் பொருளாதாரத்தை லட்சக்கணக்கில் இழந்தபோதும், உங்களுடன் உறுதியாகப் பயணித்து வந்தேன்.

Ranipet NTK worker left party

ஆனால், இன்று நீங்கள் கொள்கைக்கு முரணாக, முன்னுக்குப்பின் பேசுவது ஏற்புடையது அல்ல. பெரியாரை விமர்சித்து, தமிழ்த்தேசியத்திற்கு எதிராகப் பெரியாரை முன் நிறுத்துவது, தமிழர் நிலத்தின் மக்களுக்கே பேராபத்தாக முடியும். கட்சியை வீழ்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்லும் தங்களின் இத்தகையான செயல்பாடுகளை விரும்பாத காரணத்தால், நாம் தமிழர் கட்சியில் நான் வகித்து வந்த இராணிப்பேட்டை கிழக்கு மாவட்டச் செயலாளர் பொறுப்பிலிருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும் விலகிக்கொள்கிறேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இது நாள் வரை என்னுடன் பயணித்த உறவுகள் எனது கருத்தை புரிந்து கொள்வார்கள் என்று நம்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார். முன்னதாக, ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று செல்லும் நிலையில், மாவட்டச் செயலாளர் பாவேந்தன் விலகியது பேசுபொருளாகியுள்ளது.

இதையும் படிங்க: திடீரென டிராக்கை மாற்றும் அஜித்.. டென்ஷனான GBU டீம்!

மேலும், நேற்று தான், நாம் தமிழர் கட்சியில் இருந்து மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள் விலகுவதாக அறிவித்தார். சமீப காலமாக, சீமானின் நாம் தமிழர் கட்சியில் இருந்து பொறுப்பாளர்கள், செயலாளர்கள், நிர்வாகிகள் என பலரும் விலகி, மாற்றுக் கட்சியில் இணைந்து வருகின்றனர்.

இவ்வாறு கட்சியில் இருந்து விலகும் நிர்வாகிகள் சீமான் மீது பல்வேறு வகையான குற்றச்சாட்டுகளையும் கூறுகின்றனர். இவ்வாறு நிர்வாகிகள் கட்சியில் இருந்து விலகுவது குறித்து சீமானிடம் சமீபத்தில் கேட்டபோது, “பருவகாலங்களில் இலையுதிர் காலம் இருப்பது போல, எங்கள் கட்சிக்கு இது களையுதிர் காலம்” எனச் செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார். இதனால், நாம் தமிழர் கட்சி சற்று சலசலப்பைச் சந்தித்து வருகிறது.

  • Two years Bond with Raashi khanna Says Popular Actor 2 வருடமாக ராஷி கண்ணாவுடன்… சத்தியத்தை கசிய விட்ட பிரபல நடிகர்..!!
  • Leave a Reply