ராணிப்பேட்டை அருகே இளைஞர் ஒருவர் கை, கால்களை வெட்டி கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம் பானாவரம் அடுத்த கூத்தம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சரத்குமார் என்பவரை கடந்த சனிக்கிழமை இரவு திருவள்ளூர் போலீசார் என கூறி ஆறு பேர் கொண்ட கும்பல் இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றனர்.
இந்நிலையில், மறுநாள் காலையில் பானாவரம் அடுத்த புதூர் மலைமேடு சுடுகாட்டு பகுதியில் சரத்குமார் கை மற்றும் இரண்டு கால்கள் துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில், பாணாவரம் போலீஸாரால் சடலமாக மீட்கப்பட்டார். இந்த படுகொலையில் ஈடுபட்டவர்களை பிடிக்க ராணிப்பேட்டை காவல்துறை கண்காணிப்பாளர் தீபா சத்தியம் உத்தரவின் பேரில், இரண்டு டிஎஸ்பி தலைமையிலான இரண்டு தனிப்படை அமைக்கப்பட்டது.
முதல்கட்ட விசாரணையில் இந்த படுகொலையானது, கஞ்சா விற்பனையில் ஏற்பட்ட தகராறு காரணமாகவும், கடந்த ஓராண்டுக்கு முன்பு ரவுடி நித்யா என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கின் முன் விரோத காரணமாகவும் நடைபெற்று இருக்கலாம் என கூறப்பட்டு வந்தது.
இந்த நிலையில், இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட மேல் வீராணம் பகுதியைச் சேர்ந்த கஞ்சா வியாபாரி ராமச்சந்திரன் என்ற குற்றவாளி ஆரணி குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். மேலும், இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட ஐந்து நபர்களை பிடித்த தனிப்படை போலீசார், அவர்களை தக்கோலம் காவல் நிலையத்தில் வைத்து எவ்வாறு கொலை அரங்கேற்றப்பட்டது என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திமுகவுக்கு குழந்தைகளின் நலனை விட அரசியலே முக்கியமானது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். சென்னை: இது தொடர்பாக…
சென்னையில், இன்று (மார்ச் 4) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 70 ரூபாய் உயர்ந்து 8 ஆயிரத்து 10…
கோவை சூலூர் அருகே மாயமான பன்னிரண்டாம் வகுப்பு மாணவியை தேர்வு எழுத வைத்த காவல் ஆய்வாளரின் செயலை பல்வேறு தரப்பினரும்…
ராஷ்மிகா மந்தனா கன்னடத்தைப் புறக்கணிப்பதாக அம்மாநில காங்கிரஸ் எம்எல்ஏ குற்றம் சாட்டியுள்ள நிலையில், இவ்விவகாரம் பூதாகரமாகியுள்ளது. பெங்களூரு: இது தொடர்பாக…
நடிகர் விஜய் முதலில் பத்திரிகையாளர்களைச் சந்திக்கட்டும், அதற்கு பிறகு நீங்கள் அவரிடம் கேள்வி கேளுங்கள் என நடிகர் விஷால் கூறியுள்ளார்.…
'சர்தார் 2' படப்பிடிப்பு நிறுத்தம் பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு பிறகு,நடிகர் கார்த்தி தொடர்ந்து பல புதிய திரைப்படங்களில் பணியாற்றி…
This website uses cookies.