ரசிகர்களின் செயலால் அதிர்ந்த டெல்லி மைதானம்…அவசர அவசரமாக போலீஸ் குவிப்பு..!

Author: Selvan
30 January 2025, 5:00 pm

12 வருடங்களுக்கு பிறகு ரஞ்சி போட்டியில் விராட் கோலி

சமீபத்தில் இந்திய அணி,ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தி,படு தோல்வியை சந்தித்தது.இதனால் இந்திய ரசிகர்கள் கடும் சோகத்தில் இருந்தனர்.

இந்திய அணியில் தொடர்ந்து மோசமான பார்மை வெளிப்படுத்தி வரும் ரோஹித்,கோலி போன்ற முன்னனி வீரர்கள்,உள்ளூர் போட்டியிலும் விளையாட வேண்டும் என பிசிசிஐ அதிரடி உத்தரவை பிறப்பித்தது.

Ranji Trophy Delhi vs Railways

இதனால்,தற்போது நடந்து வரும் ரஞ்சி கோப்பை தொடரில் இந்திய அணியின் அனுபவ வீரர்கள் பலர் ஆடி வருகின்றனர்.இந்த நிலையில் இன்று டெல்லி அருண் ஜெய்ட்லி மைதானத்தில் டெல்லி மற்றும் ரயில்வேஸ் அணிகளுக்கிடையே ரஞ்சி போட்டி தொடங்கியது.

இதையும் படியுங்க: அவன்‌ திரும்பவும் வந்துட்டான்…எஸ்.ஜே சூர்யாவின் பதிவு… STR ரசிகர்கள் ஹேப்பி…!

இதில் டெல்லி அணிக்காக விராட் கோலி ஆட இருக்கிறார் என்று அறிவிப்பு வந்தவுடன் நேற்று முதல் கிரிக்கெட் ரசிகர்கள் மைதானத்திற்கு படையெடுக்க ஆரம்பித்து விட்டனர்.இதனால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.மேலும் 12 வருடங்களுக்கு பிறகு தனது சொந்த மண்ணில் ரஞ்சி போட்டி விளையாட இருப்பதால் ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது.இதனால் துணை ராணுவ படையை வர வழைத்தனர்.

இன்று காலை தொடங்கிய போட்டியில் டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது,அப்போது கோலி மைதானத்தில் பீல்டிங் செய்து கொண்டிருக்கும் போது அரங்கத்தில் இருந்த ரசிகர்கள் கோலி கோலி….என கோஷங்களை எழுப்பி வந்தனர்,மேலும் அங்கே இருந்த ரசிகர் ஒருவர் போலீஸ் பாதுகாப்பு தடுப்புகளையும் தாண்டி மைதானத்திற்குள் ஓடி,விராட்கோலி காலில் விழுந்து வணங்கினார்.

உடனே அங்கே விரைந்த பாதுகாப்பு அதிகாரிகள் அவரை பிடித்து மைதானத்திற்கு வெளியே அனுப்பி வைத்தனர்,கோலி ரசிகரை ஏதும் செய்ய வேண்டாம் என பாதுகாப்பு அதிகாரிகளிடம் கூறினார்.

இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.ஒரு ரஞ்சி போட்டியை காண வரலாறு காணாத கூட்டம் வந்துள்ளது,இதுவே முதல்முறை என கூறப்படுகிறது.

  • sundar c openly talks about nayanthara in mookuthi amman sets நயன்தாரா இப்படிலாம் செய்வாங்கனு எதிர்பார்க்கல- உண்மையை போட்டுடைத்த சுந்தர் சி!