திருமணம் செய்வதாக கூறி பாலியல் பலாத்காரம்.. விசிக பிரமுகர் மீது பெண் யூடியூபர் புகார் : நடுரோட்டில் தர்ணா!
Author: Udayachandran RadhaKrishnan3 March 2024, 11:09 am
திருமணம் செய்வதாக கூறி பாலியல் பலாத்காரம்.. விசிக பிரமுகர் மீது பெண் யூடியூபர் புகார் : நடுரோட்டில் தர்ணா!
விழுப்புரம் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே இரவு சென்னையை சேர்ந்த 27 வயதுடைய பெண் ஒருவர் திடீரென நடுரோட்டில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
உடனே அங்கு பாதுகாப்பு பணியிலிருந்த போலீசார் விரைந்து சென்று அப்பெண்ணை சமாதானம் செய்தனர். அதற்கு அப்பெண், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டை பார்க்காமல் எழுந்திருக்க மாட்டேன் எனக்கூறி தொடர்ந்து போராட்டம் செய்தார். பின்னர் தொடர்ந்து, போலீசாரிடம் அந்த பெண் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
மேலும் அப்பெண், போலீசாரிடம் கூறுகையில், நான் சென்னையை சேர்ந்தவர் youtuber கிரிஜா என்றும். சொந்த பணியின் காரணமாக கடந்த 27-ந் தேதி விழுப்புரம் வந்தபோது, தங்குவதற்காக இங்குள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த ஒருவரை தொடர்புகொண்டு ஓட்டலில் அறை முன்பதிவு செய்யுமாறு கூறினேன்.
என்னை அழைத்துச்சென்ற நபர், வலுக்கட்டாயமாக பாலியல் வன்முறை செய்ததோடு, திருமணம் செய்வதாக கூறியுள்ளார். பின்னர் விசாரித்ததில், அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது தெரியவந்தது.
இதுபற்றி அவரிடம் கேட்டபோது, எனக்கு கொலை மிரட்டல் விடுத்தார் என்றும். இதுகுறித்து விழுப்புரம் அனைத்து மகளிர் போலீசாரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றார்.
பின்னர் போலீசார், அந்த பெண்ணை பெண் காவலர்கள் அழைத்து செல்லும் பொழுது தள்ளுமுள்ளு ஏற்பட்டது அப்பொழுது பெண் காவலர்கள் அந்த பெண்ணை கை கால்களை மடக்கி பிடித்து விழுப்புரம் மகளிர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச்சென்று விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக கூறியதன்பேரில் அவர் புறப்பட்டுச்சென்றார். நடுரோட்டில் பெண் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.